டெல்லி: பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது ஆடைகளுக்கு சலுகை மற்றும் தள்ளுபடிகள் அளிக்கப்படும். ஆனால் சில ஆண்டுகளாக எல்க்ட்ராணிக்ஸ், ரியல் எஸ்டேட், வாகனங்கள் போன்றவற்றிக்கும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது விமான பயண கட்டணங்களுக்கும் சலுகைகளை அளித்து வருகிறது விமான போக்குவரத்து நிறுவனங்கள், இதில் போட்டி வேற...
இந்தியாவில் மலிவு விலை விமான நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் விழா காலத்தை மையமாக வைத்து வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர திட்டமிட்டுள்ளது. இதற்காக 899 ரூபாய் என்ற கட்டணத்தில் சலுகைகளை அளிக்கிறது.
ஜெட் ஏர்வேஸ்
"தீபாவளி டிலைட்ஸ்" என்ற பெயரில் அனைத்து கட்டணங்களும் உட்பட 899 ரூபாய்க்கு விமான பயண கட்டண சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையில் அக்டோபர் 26ஆம் தேதி வரை பதிவு செய்துக்கொள்ளலாம். ஆனால் பயணம் செய்யப்படும் நாள் நவம்பர் 1,2014 முதல் டிசம்பர் 2014 வரை மட்டுமே.
ஸ்பைஸ் ஜெட்
அவிங்க "தீபாவளி டிலைட்ஸ்" நாங்க "தீபாவளி தமாக்கா". சன் நெட்வொர்க் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் நிறுவனத்திற்கு சொத்தமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் "தீபாவளி தமாக்கா" என்ற பெயரில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை போலவே 899 ரூபாய் என்ற ஆஃபரை அறிவித்துள்ளது. இச்சலுகையில் அக்டோபர் 26ஆம் தேதி வரை பதிவு செய்துக்கொள்ளலாம். ஆனால் பயணம் செய்யப்படும் நாள் நவம்பர் 1,2014 முதல் டிசம்பர் 2014 வரை மட்டுமே.
இண்டிகோ
ஜெட்ஏர்வேஸ், ஸபைஸ்ஜெட் நிறுவனங்கள் சலுகைகளை அளிக்கும் போது இத்துறையில் முன்னணி நிறுவனமான இண்டிகோ நிறுவனம் அமைதியாகவா இருக்கும். இந்நிறுவனமும் வாடிக்கையார்களை கவர அனைத்து கட்டணங்களும் உட்பட்1590 ரூபாய் என்ற சலுகை விலையில் விமான சேவையை அளிக்க உள்ளது.
ஏர்ஏசியா..
சந்தையில் புதிதாக குதித்திருக்கும் ஏர்ஏசியா நிறுவனமும் இந்த தீபாவளி வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் படி இந்நிறுவனத்தின் பெங்களுரில் இருந்து சென்னை மற்றும் கொச்சிக்கு 999 ரூபாய் சலுகையும், பெங்களுரில் இருந்து கோவாவிற்கு 1699 ரூபாய் சலுகையும், பெங்களுரில் இருந்து ஜெய்பூர் மற்றும் சண்டிகருக்கு 2999 ரூபாய் என்ற சலுகைகளை அறிவித்துள்ளது.
வளர்ச்சி
கடந்த 6 மாதங்களாக இந்தியா விமான போக்குவரத்து நிறுவனங்கள் அதிரடியான சலுகைகளை அறிவித்து வருவதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 2014ஆம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் மாத காலகட்டங்களில் பயணிகளின் எண்ணிக்கை 7.55 சதவீதம் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications