டெல்லி: இந்திய பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு மற்றும் வளர்ச்சியை குறித்து பிரதமர் நரேந்திர மோடி வங்கி தலைவர்களை சந்திக்க உள்ளார். இக்கூட்டத்திற்கு ரிசர்வ் வங்கி ரகுராம் ராஜன் அவர்களும் கலந்து கொள்ளாவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் நிதிதுறை வல்லுனரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது பத்து வருட ஆட்சியில் ஒரு முறை கூட வங்கி தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்ததில்லை என்பது மிக முக்கியமானது.
வித்தியாசமான சந்திப்பு
பொதுவாக நாட்டின் பிரதமர் வங்கி தலைவர்களை சந்திப்பதில்லை, பொரும்பாலும் நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி தலைவர்கள் தான் வங்கித் தலைவர்களை சந்திப்பார்கள். இதனால் இச்சந்திப்பு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. மேலும் வங்கித்துறையில் புதிய மாற்றங்கள் அல்லது புதிய திட்டங்கள் பிரதமர் தலைமையில் செயல்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளது என வங்கித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
முக்கிய விவாதங்கள்
மேலும் இச்சந்திப்பில் பிரதமர் வங்கித் தலைவர்களுடன் வட்டிக்கு குறைப்பு, செயற்படா சொத்துக்கள், புதிய திட்டங்கள், நிதி உட்செலுத்துதல் மற்றும் ஜன் தன் யோஜனா திட்டத்தை பற்றி விவாதகங்கள் மேற்கொள்ளப்படும்.
கடன்கள்
பொதுத்துறை வங்கிகளின் வீட்டுக் கடன், கல்வி கடன் மற்றும் MSME கடன் பற்றிய விவாதங்களும் முக்கிய இடம்பெறும் என தெரிகிறது.
ஆட்கள் பற்றாக்குறை
6 பொதுத்துறை வங்கிகளில் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது, இது வங்கிகளின் வளர்ச்சிக்கு மிக முக்கிய தடைகளாக உள்ளது. இதனை களையவும் வங்கித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட உள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications