பெங்களுரூ: இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ 2014ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் சுமார் 8 சதவீதம் அதிகரித்து 2,085 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் மொத்த வருமானம் 1,932 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.

இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 2வது காலாண்டில் 11,683 கோடி ரூபாயாக இருந்தது, அதேபோல் இந்நிறுவனத்தின் வரி மற்றும் வட்டி பிந்தைய லாபமாக 2,306 கோடி ரூபாயாக இருந்தது.
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தில் 50 புதிய வாடிக்கையாளர் மற்றும் 6,845 புதிய பணியாட்கள் இணைந்தனர். மேலும் அசிம் பிரேம்ஜி தலைமையில் 8 மிகப்பெரிய ஆர்டர்களை கைபற்றியது விப்ரோ.
மேலும் இந்நிறுவனம் ஐடித்துறையில் மட்டும் அல்லாமல் சுகாதாரம், லைப்சைன்ஸ் மற்றும் சேவை துறையில் 20.1 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. அதேபோல் மீடியா மற்றும் டெலிகாம் துறையில் 15.4 சதவீதம் மற்றும் 8.5 சதவீதம் என்ற வீதத்தில் வளர்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications