சென்னை: மியூச்சுவல் ஃபண்ட்கள் அல்லது பரஸ்பர நிதிகள் முதலீடுகளில் ஆஃபர் டாகுமெண்ட் அல்லது வெளியீட்டு ஆவணம் என்பது திட்ட விவரக் கையேட்டைக் குறிக்கும். இதை ஒரு சட்ட பூர்வமான ஆவணமாகவும் கருதலாம்.
இது தரும் விவரங்கள் என்னென்ன?
முதலீட்டாளர்களுக்குத் தேவையான திட்ட விவரங்களை அளிக்க உதவும் சிறந்த முறை இந்த விவரக் கையேடாகும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் திட்டம் முதலீட்டிற்கு உகந்ததா என்பதை தெரிந்துகொள்ள பெருமளவு விவரங்களை இந்தக் கையேடு தரும்.

மியூச்சுவல் ஃபண்ட்கள் முதலீட்டுத் திட்டம் அளிக்கும் திட்ட விவரங்கள் மிகவும் விரிவானதாகவும் திட்ட நோக்கங்களை குறித்த விவரங்கள், முதலீட்டு வரைமுறை, சந்தா விவரம் மற்றும் திரும்பப் பெறுதல் விதிகள் ஆகியவற்றைக் கொண்டதாகவும் இருக்கும்.
இதன் முக்கியத்துவம் என்ன ?
முதலீட்டாளர்கள் நன்கு அறியப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என்பதால் இந்த கையேட்டை மேலோட்டமாக படிக்காமல் நன்கு கூர்ந்து கவனித்துப் படிக்கவேண்டியது அவசியம். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட திட்டம் கடன்களில் மட்டுமே முதலீடு செய்யும் எனில், நீங்கள் அதற்கான அபாயமுள்ள முயற்சிகளில் ஈடுபட ஆர்வமுள்ளவர் என்றால் இதைக் கைவிட விரும்புவீர்கள். எனவே, இந்த கையேடு மதிப்பு வாய்ந்த ஆலோசனைகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கும்.


Click it and Unblock the Notifications