டெல்லி: மத்திய அரசு நேற்று பொதுத்துறை வங்கிகளின் 8 தலைவர்கள் மற்றும் 14 நிர்வாக இயக்குனர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் காங்கிரஸ் ஆட்சியின் போது பதவியில் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
நிதியமைச்சகத்தின் தகவல் படி 2014-15ஆம் ஆண்டின் வங்கி தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் தகுதி மற்றும் நியமிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் நிதியமைச்சகத்தின் பிரத்தியேக குழுவின் ஆய்விற்கு பிறகு நியமன ரத்து முடிவிற்கு வந்தாக தெரிவித்துள்ளது.
சின்டிகேட் வங்கி தலைவர் ஊழல்
நிதியமைச்சகம் இக்குழுவை சின்டிகேட் வங்கியின் தலைவர் செய்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது பின் அமைக்கப்பட்டது. இதில் மத்திய செலவீன பிரிவின் செயலாளர், பள்ளி கல்வி பிரிவின் செயலாளர் மற்றும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆகியோகர் இக்குழுவில் அடக்கம்.
நியமன ரத்து
இக்குழுவின் பரிந்துரையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது பொதுத்துறையில் நியமிக்கப்பட்ட 8 தலைவர்கள் மற்றும் 11 நிர்வாக குழு இயக்குனர்கள் மத்திய அரசு அதிரடியாக நீக்க உத்தரவிட்டுள்ளது.
வங்கிகள்
இவர்கள் கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க், விஜயா வங்கி ஆகிய 8 வங்கிகளின் தலைவர்கள் ஆவார்கள். அவர்களுடன் சிண்டிகேட் வங்கியின் தலைவர் எஸ்.கே ஜெயின் அவர்களு் அடக்கம்.
புதிய பணியாளர்கள் நியமனம்
மேலும் பணியில் இருந்து நீக்கப்பட்ட அதிகாரிகளின் பணியிடத்தில் விரைவில் புதிய ஆட்களை அமைக்கும் பணியில் இக்குழு இறங்கியுள்ளது இந்நிலைவில் வங்கி பணிகள் மற்றும் வங்கி திறன் குறையா வண்ணம் ஆட்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மோடியுடன் சந்திப்பு
மேலும் நாட்டின் எந்த பிரதமர் செய்திறாத வண்ணம் பிரதமர் மோடி அவர்கள் வங்கித் தலைவர்களை சந்திதார். இதன் பின் வங்கித்துறையில் இத்தகைய மாற்றம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.
எஸ்.கே.ஜெயின்
சில மாதங்களுக்கு முன்பு சிண்டிகேட் வங்கி தலைவர் எஸ்.கே.ஜெயின் அவர்கள் நிறுவனங்களுக்கு முறைகேடாக கடன் அளித்ததிலும், இதற்கு 50 இலட்ச ரூபாய் லாபம் வங்கியதாகவும் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் துவக்கமாகவே நிதியமைச்சக குழு தனது ஆய்வை துவங்கியது.


Click it and Unblock the Notifications