டெல்லி: இந்தியாவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்த சாப்ட்பாங்க் நிறுவனம், நாட்டின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் நிறுவனத்தின் 627 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது.
மேலும் சாப்ட்பாங்க் நிறுவனத்தின் 10 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்தில் டெலிகாம் மற்றும் இகாமர்ஸ் துறை முக்கிய இடம் வகுக்கிறது.
இகாமர்ஸ் துறை
சாப்ட்பாங்க் நிறுவனம் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் முதலீடு செய்யதன் மூலம் இந்திய இகாமர்ஸ் துறையில் கால்தடம் பதித்துள்ளது. மேலும் இச்சந்தையில் அலிபாபா நிறுவனமும் இறங்க திட்டமிட்டுள்ளது அதற்கான பணிக்களும் அலிபாபா மேற்கொண்டு வருகிறது.
ஸ்னாப்டீல் நிறுவனம்
இந்தியாவில் அனைவரும் அறிந்தது போலவே ஆன்லைன் வர்த்தக துறை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் சாப்டாபாங்க் நிறுவனத்தின் முதலீடு இந்நிறுவனத்திற்கு மேலும் வழு சேர்க்கும்.
டாடா முதல் மசயோஷி வரை..
இந்தியாவில் பல ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் இருந்தாலும், ஸ்னாப்டீல் நிறுவனத்தில் மட்டும் நாட்டின் முக்கிய புள்ளிகளின் முதலீடு குவிந்து வருகிறது. இந்நிறுவனத்தில் இது வரை, ரத்தன் டாடா, அசிம் பிரேம்ஜி, ஏன்ஞல் இன்வெஸ்டர்ஸ் நிறுவனம் மற்றம் சாப்ட்பாங்க் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
ஓலா கேப்ஸ் (olacabs)
மேலும் சாப்ட்பாங்க் நிறுவனம் இன்று காலையில் இந்தியாவின் ஆன்லைன் கேப்ஸ் புக்கிங் சர்விசஸ் நிறுவனமான ஓலா நிறுவனத்தின் வர்த்தகத்தில் 210 மில்லியின் டாலர் முதலீடு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications