இந்தியாவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஜப்பான் நிறுவனம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஜப்பான் நாட்டு பல துறை நிறுவனங்களில் சாப்ட்பாங்க் நிறுவனம் முதன்மையானது, பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பயணத்தில் இந்நிறுவனத்தின் தலைவர் மசயோஷி சன் அவர்களை இந்தியாவிற்கு அழைத்தார். இதனை ஏற்று இந்தியாவிற்கு வந்த அவர், நேற்று காலையில் பிரதமரை சந்தித்தார்.

 

இச்சந்திப்பில் இந்தியாவின் ஐடி மற்றும் தொலைதொடர்பு துறையில் 10 பில்லியன் டாலர் அதாவது 60,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார் மசயோஷி சன்.

சாப்ட்பாங்க்

சாப்ட்பாங்க்

இந்நிறுவனம் ஜப்பான் நாட்டில் தொலைதொடர்பு மற்றும் இண்டர்நெட் துறையில் முதன்மையாக உள்ளது. இதே பார்மூலாவில் இந்தியாவின் டெலிகாம் மற்றும் இகாமர்ஸ் துறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்ய. ஏற்கனவே இந்நிறுவனத்துடன் பார்தி ஏர்டெல் இணைந்து செயல்பட்டு வருகிறது.

தொலைதொடர்பு அமைச்சர்

தொலைதொடர்பு அமைச்சர்

இந்த முதலீட்டு குறித்து மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவர்களை நேற்று மதியமே சந்தித்தார். அதுகுறித்து ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் மசயோஷி சன் தலைமையிலான சாப்ட்பாங்க் நிறுவனம் இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் இகாமர்ஸ் துறையில் 10 பில்லியன் டாலர் அளவு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

பல துறை நிறுவனம்
 

பல துறை நிறுவனம்

சந்தை முதலீட்டு அளவில் இந்நிறுவனம் சுமார் 32 பில்லியன் டாலர் மதிப்புடையது சாப்ட்பாங்க். இந்நிறுவனம் பிராட்பேன்டு, பிக்ஸ்டு லைன் டெலிகாம், இகாமர்ஸ், பைனான்ஸ், மீடியா மற்றும் மார்கெட்டிங் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்குகிறது. மேலும் இந்நிறுவனம் இதற்கு முன் இந்தியாவின் இன்மோபி மற்றும் ஹைக் போன்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

10 வருடம்

10 வருடம்

மேலும் மசயோஷி சன் அவர்கள் தனது முதலீட்டின் மூலம் இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 0.5 டிரில்லியன் டாலர் அளவு வர்த்தகம் இருக்கும் என தெரிவித்துள்ளார். இவரது முதலீட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் வர்த்தக ரீதியில் நட்புறவு வலிமையாகும்.

ஸ்மார்ட சிட்டி

ஸ்மார்ட சிட்டி

மத்திய அரசின் 7,060 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பற்றி ரவி சங்கர் பிரசாத் அவரிடம் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SoftBank of Japan to invest $10 b in India

Telecom giant SoftBank has pledged an investment of $10 billion (over Rs.60,000 crore) in India’s IT and communications space, one of the biggest investment commitments from a Japanese firm after Prime Minister Narendra Modi’s visit to that country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X