27,390 புள்ளிகளை எட்டி புதிய சாதனை மும்பை பங்கு சந்தை!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்று மும்பை பங்கு சந்தையின் வர்த்தக துவக்கம் முதலே உயர்வுடன் துவங்கியது. இதன் மூலம் 27,150 புள்ளிகளில் துவங்கிய வர்த்தகம் 27,390 புள்ளிகள் வரை உயர்ந்து மும்பை பங்கு சந்தையில் புதிய உச்சத்தை பெற்றது.

 

இதற்கு முக்கிய காரணம் ஆசிய சந்தைகளின் சிறப்பான வர்த்தகம் மற்றும் இம்மாத அமெரிக்க பெடரல் வங்கியின் பத்திர கொள்முதல் முடிவுக்கு வந்தது.

புதிய உச்சம்

புதிய உச்சம்

மும்பை பங்கு சந்தை புதிய உயர்வை எட்டிய நிலையில் இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி மற்றும் டாக்டர் ரெட்டி லாப்ஸ் நிறுவனங்களும் 52 வார உச்சத்தையம் தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

வர்த்தக முடிவு

வர்த்தக முடிவு

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 248.16 புள்ளிகள் உயர்ந்து 27,346.33 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல் நிஃப்டி 78.75 புள்ளிகள் உயர்ந்து 8,169.20 புள்ளிகளை எட்டி வர்த்தக முடிவுக்கு வந்தது. இந்க திடீர் வளர்ச்சிக்கு என்ன காரணம்.

பெடரல் வங்கி
 

பெடரல் வங்கி

அமெரிக்க அரசு 2008ஆம் ஆண்டு சந்தித்த நிதி நெருக்கடியில் இருந்த தப்பிக்க நாணயப் புழக்கத்தை அதிகரிக்கும் திட்டமான பத்திர கொள்முதல் திட்டத்தை அறிவித்தது. இந்த 5ஆண்டு திட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டது குறிப்பிடதக்கது. அமெரிக்க அரசு சுமார் 4.4 டிரில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியது குறிப்பிடதக்கது.

இந்தியாவில் பணபுழக்கம்

இந்தியாவில் பணபுழக்கம்

அமெரிக்காவில் பணபுழக்க திட்டம் முடிவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் ஜப்பான், சீனா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்திய சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்த வண்ணம் உள்ளனர்.

மத்திய அரசின் புதிய திட்டங்கள்

மத்திய அரசின் புதிய திட்டங்கள்

மேலும் நாட்டின் பொருளாதாரத்தை வலுமைப்படுத்த மத்திய அரசு அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் பல திட்டங்களை தீட்டி வருகிறது.

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்

அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநில தேர்தல்கள் மத்திய அரசுக்கு சாதமாக அமைந்ததால், அரசின் மீது மக்களுக்கு புதிய நம்பிக்கை வந்துள்ளது இதன் மூலம் பங்கு சந்தையில் வர்த்தகம் அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Five reasons why markets hit fresh all-time highs

The S&P BSE Sensex rallied about 300 points in intraday trade on Thursday to hit its fresh record high of 27390.60, at a time when other Asian markets were trading mixed after the Federal Reserve overnight ended its monthly bond-buying program that quadrupled its balance sheet to $4.4 trillion. 
Story first published: Thursday, October 30, 2014, 17:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X