பெங்களுரூ: இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களின் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் 4000 பணியாளர்களுக்கு அக்டோபர் மாதம் பதவி உயர்வு அளித்துள்ளது. இந்நிறுவனத்தில் திறன் வாய்ந்த பணியாளர்கள் தக்கவைத்துக்கொள்ளவும், பணியாளர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் வண்ணம் இன்போசிஸ் பதவி உயர்வு அளித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்நிறுவனத்தின் 1,65,000 ஊழியர்களில் 12 சதவீதம் பேருக்கு பதவி உயர்வு அளித்துள்ளது குறிப்பிடதக்கது.
முக்கிய துறைகள் பணியாளர்கள் மட்டும்
மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் தனது விற்பனையை அதிகரிக்க, விற்பனை, டெலிவரி மற்றும் வர்த்தக துறையில் சுமார் 5000 பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளித்துள்ளது. மேலும் ஒட்டு மொத்தமாக கடந்த 2014ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இருந்து சுமார் 19,000 பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளித்துள்ளது.
பணியாளர்கள் வெளியேற்றம் குறைந்தது
கடந்த 7 மாதமாக இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாளர்கள் வெளியேறும் எண்ணிக்கை அதிகரிக்காமல் நிலைபெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் விஷால் சிக்கா நிறுவனத்தில் பொறுப்பேற்றிய உடன் பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் 100 சதவீத போனஸ் என் பணியாளர்களுக்கு சாதகதமாக பல முயற்சிகள் செய்தார். இதனால் நிறுவனத்தில் இருந்து பணியாளர்கள் வெளியேற்றுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
புதிய துறைகள்
மேலும் இந்நிறுவனம் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக புதிய தொழில்நுட்பங்களை தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம் நீண்ட கால குறிக்கோளாக இந்நிறுவனம் புதிய துறைகளில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது.
பங்கு சந்தை
இன்போசிஸ் பங்குகள் கடந்த மே மாதம் கடுமையான சரிவை சந்தித்து 2,921 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த 5 மாதத்தில் இந்நிறுவன பங்குகள் பல நாட்களில் சரிந்தாலும், தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது. தற்போது இந்நிறுவன பங்குகள் 3945 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications