ஹைதராபாத்: உலகின் முன்னணி சமுக வலைதள நிறுவனமான பேஸ்புக், இந்தியாவில் தனது வர்த்தகத்தை பெருக்க தனிக்குழுவை அமைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் பயன்பாடு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என இந்நிறுவனம் நம்புகிறது.
இக்குழுவில் ஆன்லைன் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் தலைவர்கள் இடம்பெறுள்ளது. இதில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைவர் சச்சின் பன்சால், ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் மோஹித் பியோட்ரா, மேடிசன் வோர்ல்டு நிறுவனத்தின் தலைவர் சாம் பால்சாரா, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மார்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவின் தலைவர் டெல்னா அவாரி ஆகியோர் இக்குழுவில் அடக்கம்.

இந்தியாவில் மக்களின் டிஜிட்டல் சேவை மற்றும் அதன் சார்ந்து பொருட்களின் உபயோகம் அதிகரித்துள்ளது. மேலும் தற்போது மொபைல் போன் என்பது வாழ்விற்கு மிகவும் அவசியமானதாக உள்ளது என பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய கிளையின் தலைவர் கிருத்திகா ரெட்டி தெரிவித்தார்.
இத்துறையின் வளர்ச்சி சுகாதாரம், வங்கியியல், மற்றும் பிற துறைகளில் முக்கிய வளர்ச்சியை பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications