டெல்லி: ஆஸ்திரேலியாவில் இருந்து 12,000 டன் கோதுமை இந்தியா இறக்குமதி செய்துள்ளது, இந்தியாவில் உள்ள சத்து குறைபாடு மற்றும் பற்றாக்குறை போக்க மத்திய அரசு ஒரு டன் கோதுமையை 310-315 டாலர் விலையில் சுமார் 12,000 டன் கோதுமையை இறக்குமதி செய்துள்ளது.

தென்இந்தியாவின் சில மாவு மில்கள் இந்தியாவில் அதிக விலை கொடுத்து ஹய் புரோட்டின் கோதுமையை வாங்குவது விடுத்து அஸ்திரேலியாவில் இருந்து குறைவான விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியையும் மத்திய அரசு அளித்துள்ளது.
மேலும் இந்த இறக்குமதிக் குறித்து டெல்லியை சேர்ந்த இரு வர்த்தக அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இந்தியாவில் உற்பத்தியாகும் ஹய் புரோட்டின் கோதுமைகள் பாஸ்தா மற்றும் நூடில்ஸ் செய்வதற்கு உதவுகிறது. மேலும் இதன் விலை அதிகமாக இருப்பதால் தென் இந்தியாவில் இருக்கும் சில மாவு மில் அதிபர்கள் தங்களின் வர்த்தகத்திற்கு ஏதுவான வகையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications