மும்பை: அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் 5 ஆண்டு பத்திர கொள்முதல் திட்டம் புதன்கிழமை முடிவடைந்த நிலையில் இந்திய சந்தையில் அதிகப்படியான முதலீடு குவிய துவங்கியுள்ளது. இதன் மூலம் மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் சூடுப்பிடித்துள்ளது, இன்று காலை வர்த்தகம் துவங்கிய முதல் உயர்வுடனே இருந்தது வருகிறது.
சரியாக 12 மணியாளவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 27,754 புள்ளிகளை அடைந்து புதிய உச்சத்தை தொட்டது. அதேபோல் நிஃப்டியும் 111.25 புள்ளிகள் உயர்ந்து 8,280 புள்ளிகளை அடைந்து புதிய சாதனைகளை படைத்துள்ளது இந்திய வர்த்தக சந்தைகள். இன்னும் சில மாதங்களில் சென்செக்ஸ் 30,000 புள்ளிகளை எட்டிவிடும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய துறைகள்
மும்பை பங்கு சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் ஐடி, சுகாதாரம் மற்றும் கேப்பிடல் கூட்ஸ் ஆகிய துறைகளின் வர்த்தகமும் 1.49 சதவீத வளர்ச்சியில் மிகவும் சிறப்பாக உள்ளது.
30 சென்செக்ஸ் குறியீட்டு
சந்தையின் 30 சென்செக்ஸ் குறியீட்டில் இன்போசிஸ், டாக்டர் ரெட்டி, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், ஐடிசி, எல்&டி. மஹிந்திரா & மஹிந்திரா, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் மற்றும் எஸ்.பி.ஐ வங்கி ஆகியவற்றின் பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
ஆசிய சந்தைகள்
இன்றைய வர்த்தகத்தில் ஆசியா சந்தைகள் அனைத்தும் உயர்வுடனே இருந்தது. இந்நிலையில் ஜப்பான் நிக்கி 1.68 சதவீத வளர்ச்சியும்,. ஹாங்காங் சந்தை 0.89 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளது.
30,000 புள்ளிகள்
மேலும் அடுத்த 3 முதல் 5 மாதங்களில் சென்செக்ஸ் 30,000 புள்ளிகளை எட்டும் என சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் நிஃப்டியும் 8500 புள்ளிகளை கண்டிப்பாக எட்டிம் எனவும் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications