ஒரு மாதத்தில் 8 புதிய வங்கி தலைவர்கள் நியமிக்கப்படும்!! நிதியமைச்சகம்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் 8 பொதுத்துறை வங்கி தலைவர்கள் மற்றும் 14 வங்கி நிர்வாக இயக்குனர்களை தகுதி குறைபாடு காரணமாக மத்திய நிதியமைச்சகம் பணி நீக்கம் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் நிக்கமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

 

இப்பதவியில் புதிய மற்றும் தகுதியான பணியாளர்களை நியமிக்கும் பணி துவங்கியதாகவும், இப்பணி நவம்பர் மாத இறுதியில் நிறைவு பெறும் என நிதிச் சேவை துறையின் செயலாளர் ஜி.எஸ்.சந்து தெரிவித்துள்ளார்.

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

புதிய அதிகாரிகளை நியமிக்கும் பணியில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையிலான குழு செயல்படுகிறது. மேலும் இப்பணிகளுக்கான நேர்முகத் தேர்வு வரும் நவம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

குழுவில் இதர அதிகாரிகள்

குழுவில் இதர அதிகாரிகள்

ரகுராம் ராஜன் தலைமை வகிக்கும் இக்குழுவில் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், நிதிச்சேவை துறையின் செயலாளர் மற்றும் நிதியமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவர்களின் பெயரை நியமனம் குழுவிற்கு (Appointments Committee of Cabinet (ACC)) அனுப்பப்படும்.

வங்கிகள்
 

வங்கிகள்

பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி ஆகிய வங்கிகளுக்கு புதிய தலைவர்களை நிதியமைச்சகம் டிசம்பர் மாத துவக்கத்தில் நியமிக்கும்.

சிண்டிகேட் வங்கியின் தலைவர்

சிண்டிகேட் வங்கியின் தலைவர்

இந்திய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியின் தலைவர் எஸ்.கே.ஜெயின் அவர்கள் தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக கடன் அளித்துள்ளார் அதற்காதக அவர் 50 இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றார். இதை தொடர்ந்து நிதியமைச்சகத்தின் ஆய்வில் பொதுத்துறை வங்கிதகளின் 8 தலைவர்கள் மற்றும் 14 நிர்வாக இயக்குனர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

பிரதமர் வங்கி அதிகாரிகளுடன் சந்திப்பு

பிரதமர் வங்கி அதிகாரிகளுடன் சந்திப்பு

வங்கி தலைவர்கள் இல்லாத நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை கண்கானிக்கும் வகையில் வங்கிகளின் தலைவர்களை வருகிற நவம்பர் 5ஆம் தேதி டெல்லியில் சந்திக்க உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Appointment of eight public sector bank CMDs by month-end: Sandhu

After scrapping the selection of public sector bank (PSB) heads made during the previous government’s tenure, the Narendra Modi-led government will begin a fresh selection process, and is hopeful of finalising the candidates for eight PSBs within this month.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X