சென்னை: மொபைல் வர்த்தகத்தில் இருந்து முழுமையாக வெளியேறிய நோக்கியா நிறுவனத்தின் சென்னை உற்பத்தி ஆலையின் மீது வரி ஏய்ப்பு வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு.
இவ்வழக்கின் தீர்ப்பும் தமிழக அரசிற்கு சாதகமாக வந்ததுள்ள நிலையில் வரி ஏய்ப்பு செய்த தொகையைக் கொடுக்க நிறுவன கணக்கில் பணம் இல்லை என நோக்கியா தெரிவித்தது. பணத்தை செலுத்த என்ன வழி???
ஒப்புதல்
இதனால் தொழிற்சாலையை விற்க இந்நிறுவனம் முடிவு செய்து, இதற்கான தமிழக அரசின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டு இருந்தது. இந்நிலையில் நேற்று தமிழக அரசு சென்னையில் உள்ள நோக்கியா தொழிற்சாலையை விற்க அனுமதி வழங்கியது.
எஸ்குரோ கணக்கு
தொழிற்சாலையை விற்கப்படும் அனைத்து தொகையும் மூன்றாம் கணக்கான எஸ்குரோ கணக்கில் வைக்க நோக்கியா நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதன் மூலம் தமிழக அரசு இத்தொகையை நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும்.
வருவாய் துறை ஒப்புதல்
மேலும் தமிழக அரசின் ஒப்புதலை தொடர்ந்து இந்நிறுவனம் வருமான வரித்துறையிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் இதற்கான பணிகளை நோக்கியா இந்தியா செய்து வருகிறது.
குத்தகை
தொழிற்சாலை நோக்கியா நிறுவனத்தின் பெயரில் இருந்தாலும், தொழிற்சாலை அமைந்துள்ள நிலம் தமிழக அரசு சொந்தமானது. தமிழக அரசு நிலத்தை நேக்கியா நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளது.
தமிழக அரசும்.. மொபைல் உற்பத்தியும்..
நோக்கியா நிறுவனம் அளித்த மனுவின் படி, நிலம் தமிழக அரசிற்கு சொந்தமாக இருக்கும் பட்சத்தில், தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த நோக்கியா நிறுவனம் பரிந்துறை செய்தது. தமிழக அரசிற்கு இத்துறையில் முன் அனுபவம் மற்றும் அதற்கான செயல் திட்டங்கள் இல்லாத காரணத்தால் நிறுவனத்தை விற்க ஒப்புதல் அளித்ததுள்ளது.
நோக்கியா தொழிற்சாலை
இந்நிறுவனத்தின் உற்பத்தியை கடந்த மாதம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதற்குமுன் இந்நிறுவனத்தின் பணியாற்றி வந்த பணியாளர்களுக்கு நிறுவனம் வி.ஆர்.எஸ் வழங்கப்பட்டது. இதில் 500 பணியாளர்கள் மட்டும் வி.ஆர்.எஸ் பெறாமல் இருந்தனர், இவர் இந்நிறுவனத்தின் விற்பனையை எதிர்த்து வழக்கு தொடுத்த திட்டமிட்டுள்ள நிலையில் தமிழக அரசு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
மைக்ரோசாப்ட்
நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கைபற்றிய போது இத்தொழிற்சாலையில் இருந்து 500 பணியாளர்களை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாற்றிக்கொண்டது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications