சிங்கப்பூரில் அபுதாபி கமர்சியல் வங்கி துவக்கம்!!
சிங்கப்பூர்: ஐக்கிய அரபு நாடுகளின் வங்கி அமைப்புகள் முதலீட்டை அதிகரிக்க, ஆசியா கண்டத்தின் பிற பகுதிகளில் தனது வங்கியை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதிகளில் இருந்து வர்த்தகம் மற்றும் முதலீடுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும் என அந்நாட்டு வங்கி அமைப்புகள் தெரிவிக்கிறது.

இத்திட்டத்தின் படி அபுதாபி கமர்சியல் வங்கி, சிங்கப்பூரில் தனது புதிய கிளையை திறந்துள்ளது, இதன்மூலம் ஆசியாவின் பிற பகுதிகளிலும் வங்கிக் கிளையை திறக்க இவ்வங்கி திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் சொத்து மதிப்பில் 4வது இடத்தில் இருக்கும் அபுதாபி கமர்சியல் வங்கி, சிங்கப்பூரில் தனது கிளையை துவக்க அந்நாட்டு நிதியியல் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 5 மாதங்களில் இவ்வங்கி லண்டனில் ஒரு கிளையும், இந்தியாவில் இரண்டு கிளையும் துவங்கியுள்ளது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications