டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், தனது போஸ்ட் பெய்டு கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் குறிப்பிட்ட சில போஸ்ட்-பெய்டு திட்டத்திற்கு மட்டும் கட்டணத்தை 12 சதவீதம் அளவில் அதிகரிக்க உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிராய் அமைப்பு 2ஜி மற்றும் 3ஜி அலைகற்றை மின்னணு முறையில் ஏலம் விட திட்டமிட்டுள்ளது, ஏலம் முடிந்த பின்பே கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு இருந்த ஏர்டெல் நிறுவனம் இப்போதே கட்டணங்களை உயர்த்த துவங்கியுள்ளது.
கட்டண உயர்வு
ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளருக்கு இந்நிறுவனம் அளித்த தகவல் படி வரும் டிசம்பர் 3ஆம் தேதி முதல் போஸ்ட்பெய்டு மொபைல் மாதக் கட்டணம் 199 ரூபாயில் இருந்து 224 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மொபைல் இண்டர்நெட்
இந்த கட்டண உயர்வு கடந்த மூன்று மாதத்தில் 2வது முறையாகும், கடந்த செப்டம்பர் மாதம் மொபைல் இண்டர்நெட் கட்டணம் சுமார் 33 சதவீதம் உயர்த்தியது குறிப்பிடதக்கது. இதனால் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களின் மலிவான திட்ட பயன்படுகள் குறைந்தது.
மலிவான திட்டங்கள்
மேலும் இந்நிறுவனம் மலிவான திட்டங்கள் அனைத்திற்கு கட்டண உயர்வை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இதுகுறித்து நிறுவனத்திடம் எந்தவிதமான பதிலும் இல்லை.
வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் மட்டும் இந்நிறுவனம் சுமார் 20 கோடி மொபைல் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதில் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்டுபெய்டு வாடிக்கையாளர்களும் அடக்கம்.
2ஆம் காலாண்டு முடிவுகள்
2014ஆம் நிதியாண்டில் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த 2வது காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் மட்டும் 1,383 கோடி ரூபாய்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications