மும்பை: நாட்டில் பணவீக்கத்தின் பாதிப்பு குறைந்ததை அடுத்து, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியிடும் பணவியல்கொள்கையில் வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கபப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்த சில நாட்களிலேயே வங்கிகள் தனது வட்டியை குறைக்க வேண்டும் என ராய்ல் பாங்க் ஆஃப் ஸ்காட்லேண்டு தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட கடந்த இரு பணவியல் கொள்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தின் காரணமாக வட்டி வகிதங்கள் எதுவும் மாற்றாமல் அறிவித்தது.
ராய்ல் பாங்க் ஆஃப் ஸ்காட்லேண்டு (ஆர்.பி.எஸ்)
இவ்வங்கியின் இந்திய கிளையின் தலைவர் பிரிஜேஷ் மெஹரா கூறுகையில்,"வட்டி விகிதத்தை குறைப்பதற்கு மிகவும் சரியான தருணம் இது, மேலும் பணவீக்கத்தின் தாக்கம் இதற்கு சாதகமாக அமைந்துள்ளது." என அவர் தெரிவித்தார்.
பணவீக்கம்
செப்டம்பர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் (WPI) 2.38 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது கடந்த 5 வருட சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடதக்கது. அதேபோல் சில்லறை விலை பணவீக்கமும் (CPI) 6.46 சதவீதமாக உள்ளது.
ரிசர்வ் வங்கி
வட்டி வகிதம் குறைப்பு பற்றிய கருத்துகளை தொடர்ந்து கவனிக்காமல் ரகுராம் ராஜன் இருந்தாலும், நாட்டின் விலை நிலவரம், பொருளாதார நிலை மற்றும் புதிய அரசின் ஆட்சி நிலைபாடும் அகியவற்றை கருத்தில் கொள்ளும்போது வட்டி வகிதத்தை கண்டிப்பாக குறைக்க முடியும் என ஒரு பகுதியினர் தெரிவிக்கின்றனர். மற்றொரு பிரிவினர், வட்டி விகிதம் மாற்றாமல் இருப்பதே சரியான முடிவு என்றும் தெரிவித்து வருகிறது.
வட்டி வகிதம்
மேலும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியிடும் ரிசர்வ் வங்கியின் பணவியல்கொள்கையில் ரெப்போ விகிதம் சுமார் 50 அடைப்படை புள்ளிகள் குறையும் என சில அமைச்சர்கள் தெரிவித்தனர்.
ரகுராம் ராஜன்
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பதிவியேற்றிய பின்பு ரெப்போ விகிதம் சுமார் 100 அடிப்பிடை புள்ளகள் அதிகரித்து, தற்போது 8 சதவீதமாக உள்ளது.
பன்னாட்டு வங்கிகள்
அதுமட்டும் அல்லாமல் நாட்டின் தற்போது அதிகப்படியான அன்னிய முதலீடு குவிந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பை எதிர்பார்த்து இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு வங்கிகளான ராய்ல் பாங்க் ஆஃப் ஸ்காட்லேண்டு, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, பாங்க் ஆஃப் அமெரிக்கா மெர்ரில் லிஞ்ச் ஆகிய வங்கிகள் காத்துக்கிடக்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications