தொடரும் வாகன விற்பனை சரிவு! அக்டோபரில் மட்டும் கார்கள் விற்பனை 2.55% குறைந்தது!

மும்பை: அக்டோபர் மாதத்தில் கார்கள் விற்பனையானது 2.55% அளவுக்கு சரிவைக் கண்டிருப்பதாக இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அக்டோபர் மாதத்தில் மொத்த வாகன விற்பனை எண்ணிக்கை 17,87,146-ஆகும். சென்ற ஆண்டு அக்டோபரில் விற்பனையான 18,58,594-ஐவிட இது 3.84% குறைவு.

தொடரும் வாகன விற்பனை சரிவு! அக்டோபரில் மட்டும் கார்கள் விற்பனை 2.55% குறைந்தது!

கார் விற்பனை மட்டுமே, 2.55% அளவு சரிவடைந்தது. அக்டோபர் மாதத்தில் அனைத்துக் கார் மாடல்களின் மொத்த விற்பனை எண்ணிக்கை 1,59,036-ஆக இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபரின் விற்பனை எண்ணிக்கை 1,63,199-ஆக இருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சரிவைக் கண்டு வந்த கார் விற்பனையானது, மே மாதம் முதல் வளர்ச்சி பெற்று வந்தது. ஆகஸ்ட் வரை விற்பனை வளர்ச்சி அடைந்த நிலையில், செப்டம்பரில் மீண்டும் தொய்வடைந்தது.

அக்டோபரில், மோட்டார் சைக்கிள்களின் விற்பனை 8.73% சரிந்தது. ஆனால் ஸ்கூட்டர் விற்பனை 10.89% வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் சங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+