99 ஐபோன்களை இதய வடிவில் வைத்து நடுவில் நின்று லவ்யூ சொன்ன வாலிபர்.. ஸாரி சொன்ன இளம் பெண்!

By Chakra
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குவாங்ஷூ, சீனா: சீனாவில் ஒரு இளைஞர் தனது மனம் கவர்ந்த பெண்ணிடம் ஐ லவ்யூ என்று வித்தியாசமான முறையில் சொல்லி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். ஆனால் அந்தப் பெண்ணோ ஸாரி சொல்லி விட்டார்.

 

தனது காதலை வித்தியாசமாக சொல்ல அந்த வாலிபர் மேற்கொண்ட முயற்சி மிகவும் வித்தியாசமாக இருந்தது.

ஆனால் அந்த வித்தியாசத்தை தனது நிராகரிப்பின் மூலம் சோகமாக்கி விட்டார் அந்தப் பெண்.

99 ஐபோன்களை இதய வடிவில் வைத்து நடுவில் நின்று லவ்யூ சொன்ன வாலிபர்.. ஸாரி சொன்ன இளம் பெண்!

சிங்கிள்ஸ் டே:

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதியை காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள். ஆனால் சீனாவில் நவம்பர் 11ம் தேதியை சிங்கிள்ஸ் டே என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இதுவும் கூட ஒரு வகையில் காதலர் தினம் போலத்தான்.

இதயம் இடம் மாறும் தினம்:

இந்த தினத்தில் காதலன் அல்லது காதலி இல்லாமல் இருப்பவர்கள் தங்களது துணையை அணுகி காதலைச் சொல்லி ஏற்கக் கோருவார்கள்.

இவர் வேற மாதிரி:

இந்த இளைஞர்களுக்கு மத்தியில் இந்த சீன இளைஞர் மிகவும் வித்தியாசமாக தனது காதலை, தனது மனம் கவர்ந்த பெண்ணிட் சொல்லி அதிசயிக்க வைத்துள்ளார்.

99 ஐபோன்கள்:

இவர் 99, ஐபோன் 6 ரக போன்களை வாங்கினார். பின்னர் தனது தோழியை வரவழைத்தார். அவரது நண்பர்களையும் கூட அழைத்தார். பின்னர் ஐபோன்களை தரையில் இதய வடிவில் வைத்து நடுவே அந்தப் பெண்ணை நிற்க வைத்து தனது காதலைச் சொன்னார்.

82,000 டாலர் செலவில்:

இந்த ஐபோன்களை அந்த நபர் 82,000 டாலர் செலவிட்டு வாங்கியுள்ளார். ஆனால் எல்லாமே வீணாகிப் போனது. காரணம் அந்தப் பெண் இவரது கோரிக்கையை நிராகரித்து விட்டதால்.

இப்போது டிவிட்டரில் இந்தப் படமும், கதையும்தான் சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

He proposed With a Heart Made of 99 iPhone 6s. She Said No

He’s got 99 problems, but a fiancé ain’t one. A love-struck Chinese man decided to propose to his girlfriend in the middle of a heart made from 99 iPhone 6s, at a cost of over 500,000 yuan ($94,400), according to The Nafang, citing local media.
Story first published: Wednesday, November 12, 2014, 14:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X