மும்பை: நஷ்டத்தை கட்டுப்படுத்த தன்னிடம் உள்ள விமானங்களின் எண்ணிக்கையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் குறைத்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நஷ்டத்தை கட்டுப்படுத்த தன்னிடம் உள்ள விமானங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் ஸ்பைஸ்ஜெட் தன்னிடம் இருந்த 10 போயிங் 737 ரக விமானங்களை லீஸுக்கு எடுத்தவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டது. இதனால் அதனிடம் இருந்த விமானங்களின் எண்ணிக்கை 58ல் இருந்து 48 ஆக குறைந்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் தற்போது 15 பம்பார்டியர் க்யூ 400 ரக விமானங்களையும், 33 போயிங் 737 ரக விமானங்களையும் இயக்கி வருகிறது. சூரத் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் எருமையின் மீது மோதியதால் சில விமான சேவையை நிறுத்த வேண்டியதாகிவிட்டது.
இது குறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
லீஸுக்கு விட்டவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்ட போயிங் விமானங்கள் பழையது. எங்களிடம் தற்போது 33 போயிங் 737 ரக விமானங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 35 அல்லது 36 ஆக அதிகரிக்கும் என்றார்.
ஸ்பைஸ்ஜெட் தன்னிடம் உள்ள விமானங்களின் எண்ணிக்கையை குறைத்து வரும் வேளையில் அதன் போட்டி நிறுவனமான இன்டிகோ விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இன்டிகோ அண்மையில் தான் தனது 100வது விமானத்தை வாங்கியது.
2014-2015ம் நிதியாண்டின் முதல் காலிறுதியில் ரூ.124 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், முன்னதாக 2014ம் நிதியாண்டில் ரூ.1,000 ஆயிரம் கோடி வருடாந்திர நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications