டெல்லி: நாட்டின் உள்நாட்டு விமான சேவை கடந்த அக்டோபர் மாதத்தில் 18% அளவுக்கு அதிகரித்துள்ளது. இதில் இண்டிகோ நிறுவனம் முதலிடத்திலும் ஏர் இந்தியா 2-வது இடத்திலும் இருக்கிறது.
உள்நாட்டு விமான சேவைகள் மூலம் 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்தம் 50.08 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் இது 59.25 லட்சமாக அதிகரித்துள்ளது.

விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இண்டிகோ விமான நிறுவனம் மூலம் 18.90 லட்சம் பேரும் ஏர் இந்தியா மூலமாக 11.56 லட்சம் பேரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்த்தின் மூலமாக 10.27 லட்சம் பேரும் பயணித்துள்ளனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மூலமாக 9.73 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.
மிகக் குறைந்த அளவாக ஏர் ஏசியா நிறுவனத்தின் மூலம் 66 ஆயிரம்பேர்தான் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக ஜனவரி முதல் அக்டோபர் வரையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் உள்நாட்டு விமான சேவையானது 8.61% அதிகரித்துள்ளது.
மேலும் அக்டோபர் மாதத்தில் சேவைகள் ரத்து உள்ளிட்ட பல காரணங்களுக்காக சுமார் ரூ1.5 கோடி அளவுக்கு பயணிகளுக்கு இந்திய விமான நிறுவனங்கள் பணத்தை செலுத்தியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications