டெல்லி: ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் இந்திய வங்கிகள் பெற்ற வைப்புத் தொகையின் மதிப்பு ரூ. 81.14 லட்சம் கோடியாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் வைப்புத் தொகைகள், கடன் தொகைகள் தொடர்பான காலாண்டு அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவித்துள்ள விவரம்:
வைப்புத்தொகை உயர்வு
இரண்டாம் காலாண்டில், இந்திய வங்கிகள் மொத்தமாகப் பெற்ற வைப்புத் தொகை 12 சதவீத அளவு வளர்ச்சி பெற்றது. பொதுத் துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், பிற வங்கிகள் என அனைத்து வங்கிகளும் பெற்ற வைப்புத் தொகையின் மதிப்பு ரூ. 81.14 லட்சம் கோடியாகும். கடந்த நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு அளவில், வங்கிகளில் இருந்த வைப்புத் தொகையின் மதிப்பு ரூ. 72.26 லட்சம் கோடியாகும்.
கடன்களின் மதிப்பு
நடப்பு நிதியாண்டின் 2-ஆம் காலாண்டில், வங்கிகள் அளித்த மொத்த கடன்களின் மதிப்பு ரூ. 61.57 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கடன் அளிப்பு மதிப்பு ரூ. 48.88 லட்சம் கோடியாக இருந்தது.
பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு
மொத்த வைப்புத் தொகையில், பொதுத் துறை வங்கிகளின் பங்களிப்பு 74 சதவீதமாகும். தனியார் வங்கிகளின் பங்களிப்பு 18 சதவீதமாக இருந்தது.
கடன் அளிப்பில் பொதுத் துறை வங்கிகளின் பங்களிப்பு 71 சதவீதமாக இருந்தது. இந்த வகையில் தனியார் துறை வங்கிகளின் பங்களிப்பு 20 சதவீதமாகும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் காலாண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications