‘புளு’வுக்கு ‘ரெட்’ போடும் வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள்

By Mayura Akilan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வாட்ஸ்அப் மூலம் இன்றைக்கு விவாகரத்துகள் கூட அதிகரித்து வருகிறது. அலுவலகங்களில் மேலதிகாரிகளுக்கும் பதில்சொல்ல முடியவில்லை அந்த அளவிற்கு ஒரே அக்கப்போராக உள்ளது வாட்ஸ் அப் அப்ளிகேசனில் உள்ள புளுடிக் வசதி.

 

பிரபல இணையதள வழி குறுந்தகவல் சேவை நிறுவனமான ‘வாட்ஸ் அப்' புதிதாக அறிமுகப் படுத்தியுள்ள ‘புளூ டிக்' வசதிக்கு வாடிக்கையாளர்களிடையே கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் உருவாகியுள்ளது. இந்த புளுடிக் வசதியை எப்படி நீக்குவது என்பதுதான் இப்போதைக்கு இளசுகளிடையே முக்கிய விவாதமாக உள்ளது.

‘பேஸ்புக்', ‘டிவிட்டர்' போல, செல்போன் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது‘வாட்ஸ் அப்'. எதை சவுகரியம் என்று நினைக்கிறோமோ அதுவே சில சமயம் சங்கடமாக போகிறது. இதில் ‘லாஸ்ட் ஸீன்' என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டபோது, தங்களுடைய தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் கூறினார்கள். அதாவது, ஒருவர் கடைசியாக ‘வாட்ஸ் அப்' தகவல் சேவையை எப்போது பயன்படுத்தினீர்கள் என அவருடைய செல்போன் எண்ணை அறிந்தவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

லாஸ்ட் ஸீன்

லாஸ்ட் ஸீன்

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, ‘லாஸ்ட் ஸீன்' வசதியை மறைக்க வகை செய்யும் புதிய வெர்ஷனை ‘வாட்ஸ் அப்' அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் புதிய முயற்சியாக, அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ‘புளூ டிக்' வசதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புளு டிக்

புளு டிக்

‘வாட்ஸ் அப்'பில் நாம் அனுப்பிய தகவல், ஒருவரைச் சென்ற டைந்ததா என்பதனை அந்த தகவலின் இறுதியில் 2 ‘டிக் மார்க்' தெரிவதை வைத்து உறுதி செய்துகொள்ளலாம். ஆனால், நமது தகவலை மறுமுனையில் இருப்பவர் படித்தாரா, இல்லையா என்பதை அறிவதற்கான வசதி கிடையாது.

அதனை நிவர்த்தி செய்யும் விதமாக, மறுமுனையில் இருப்ப வர் படித்துவிட்டார் என்பதை தகவல் அனுப்பியவர் அறியும் வகையில் அவரது குறுந்தகவல் அருகில் நீல நிறத்தில் இரு டிக் மார்க் தெரியும் வகையிலான வசதியை ‘வாட்ஸ் அப்' சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு
 

வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு

வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி செய்துதரும் நோக்கில், இந்த வசதியை அந்நிறுவனம் அறிமுகப் படுத்தினாலும், அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி ஃபேஸ்புக், டிவிட்டரில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

எப்படி நீக்குவது

எப்படி நீக்குவது

லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதால், அதற்கு தீர்வை அளிக்கும் முயற்சியில் ‘வாட்ஸ் அப்' இறங்கியுள்ளது. அதனால், சோதனை முயற்சியாக தனது இணையதளத்தில் புதிய வெர்ஷனை (http://www.whatsapp.com/android/) அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதனை டவுன்லோடு செய்துகொண்டால், புளூ டிக் தொல்லையிலிருந்து விடுபடலாம். ஆனால், அது ‘கூகுள் பிளே ஸ்டோரில் வருவதற்கு மேலும் சில காலம் ஆகும் எனத் தெரிகிறது. எனவே உயர் அதிகாரிகளிடமிருந்தும், மனைவியிடம் இருந்தும் தப்பிக்க நினைப் போர், விரைவாக செயல்பட்டு புதிய வெர்ஷனை டவுன்லோடு செய்துகொள்ளலாமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to remove the ‘blue ticks’ in Whatsapp

The ‘Read receipts’ feature, which allows users to check if their messages have been read, can be disabled now. Much to the consternation of users, Whatsapp had introduced ‘blue tick marks’ against messages that have been read.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X