மும்பை: ஸ்டேட் பாங்க் குழுமங்களில் கிளார்க் பதவிக்கு மிகப்பெரிய அளவில் ஆட்களை சேர்க்க இவ்வங்கி திட்டமிட்டுள்ளது.
கடந்த ஜூலை/ஆகஸ்ட் 2014ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளார்க் பதவியில் சுமார் 5,500 பணியாட்களை நியமித்தது, தற்போது இவ்வங்கியின் துணை வங்கி நிறுவனங்களில் சுமார் 7,644 பணியிடங்களை நிரப்ப இவ்வங்கி குழுமம் முடிவு செய்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள்
இந்தியாவில் செயல்படும் பிற பொதுத்துறை வங்கிகளை போலவே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவும் இரட்டை சவால் பிரச்சனனையை சந்தித்து வருகிறது.
இரட்டை சவால்
பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சகத்தின் திட்டங்களின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தனது வங்கி சேவை மற்றும் கிளைகளை விரிவாக்கும் செய்ய திட்டமிட்டுள்ளது இதன் மூலம் வங்கிகளில் ஆட்களை நிரப்ப இவ்வங்கி துரிதமாக செயல்பட்டு வருகிறது. இதேபோல் ஸ்டேட் பாங்க் குருப் வங்கிகளில் பல பணியாளர்கள் ஒய்வுபெறுகின்றனர், இவர்களின் பணியிடங்களையும் நிரப்ப இவ்வங்கி அமைப்பு திட்டமிட்டு வருகிறது.
7,644 பணியிடங்கள்
ஸ்டேட் பாங்க் குரூப் அளித்த தகவலின் படி ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதெராபாத் 2,556 பணியிடங்களையும், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா 1,541 பணியிடங்களையும், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் 1,527 பணியிடங்களையும், ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானிர் மற்றும் ஜெய்ப்பூர் 1,188 பணியிடங்களையும் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் 852 பணியிடங்களையும் நிரப்ப திட்டமிட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பம்
இப்பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு விண்ணப்பம் நவம்பர் 20ஆம் தேதி துவங்கி டிசம்பர் 9ஆம் அன்று முடிவடைகிறது. இதற்கான தேர்வு 2015ஆம் ஆண்டின் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடைபெறும்.
செக் பாயின்ட்
மேலும் இத்தேர்வில் விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு வங்கிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications