மின் நிலையங்களை தொடர்ந்து வாங்கி குவிக்கும் அதானி குழுமம்!!

டெல்லி: கோர்பாவில் அமைந்துள்ள கவுதம் தாபர் தலைமையில் இயங்கி வரும் அவந்தா குழுமத்தின் 600 மெகாவாட் திறனுள்ள கோர்பா வெஸ்ட் பவர் மின் உற்பத்தி நிலையத்தை வாங்கியுள்ளதன் மூலம் கடந்த நான்கு மாதங்களில் அதிரடியாக அடுத்த பெரும் வர்த்தக உடன்பாட்டை அதானி பவர் நிறுவனம் செய்துள்ளது. ரூ.4200 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் மும்பை பங்குச்சந்தையில் அதானியின் பங்குகள் மதிப்பு 2.65 சதவிகிதம் உயர்ந்தது.

இதற்கு முன் கடந்த ஆகஸ்டு மாதம் உடுப்பியில் இயங்கிவந்த கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த லாங்கோ இன்ஃப்ரா நிறுவனத்திற்கு சொந்தமான 1200 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை ரூபாய் 6000 கோடி கொடுத்து அதானி வாங்கியிருந்தது நினைவிருக்கலாம்.

அனல் மின் நிலையம்

அனல் மின் நிலையம்

கோர்பா வெஸ்ட் பவர் நிறுவனம் 600 மெகாவாட் சக்தி கொண்ட கட்டிமுடிக்கப்பட்ட நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையத்தை சொந்தமாக வைத்து அதனை மேலும் விரிவுபடுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த பரிமாற்றம் மூலம் அதானி பவர் முடிக்கப்பட்ட மொத்த உற்பத்தித் திறனாக 11,040 மெகாவாட் அளவுடன் நாட்டிலேயே முன்னணி ஹனியார் மின் உற்பத்தி நிறுவனமாக திகழ்வதாக அந்த நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

4,200 கோடி ரூபாய்

4,200 கோடி ரூபாய்

அதானி குழுமம் இந்த பரிவர்த்தனையின் மதிப்பை வெளியிடவில்லையென்றாலும் டெல்லியிலுள்ள அவந்த குழும தலைமையகம் இதன் மதிப்பு 4200 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளது.

20,000 மெகாவாட் மின்சாரம்

20,000 மெகாவாட் மின்சாரம்

இதன் மூலம் அதானியின் மின்உற்பத்திக் கட்டமைப்பு 11,040 மெகாவாட்டாக உயரும். அந்த நிறுவனம் 2020 ஆண்டிற்குள் மொத்த உற்பத்தித் திறன் இலக்கை 20,000 மெகாவாட் என்ற அளவாக நிர்ணையித்துள்ளது.

கவுதம் அதானி

கவுதம் அதானி

இந்த ஒப்பந்தம் குறித்து அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி தெரிவிக்கையில், "இது மின் உற்பத்தித் துறையில் ஒருங்கிணைப்பு செய்யவேண்டிய தருணம். எனவே அதானி பவர் மின் உற்பத்திக் கட்டமைப்புகள் மற்றும் சொத்துக்களை வாங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்து இக்குழுமத்தின் மற்ற வர்த்தகங்களுடன் குறிப்பாக கடைநிலை செலவின வர்த்தக முயற்சிகளுக்குப் பொருத்தமாக இருக்கும்" என்றார்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

"இந்த கொள்முதல் மூலம் எங்களின் வர்த்தகம் இந்தயா முழுவதும் வேரூன்றுவதுடன், மின் உற்பத்தி மற்றும் நிலக்கரிச் சுரங்கத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளுக்கு சான்றாக அமைகிறது"

கோர்பா மின்நிலையம்

கோர்பா மின்நிலையம்

"இந்த கோர்பா மின்நிலைய கொள்முதல் மூலம் நிலக்கரிச் சுரங்கத் துறையில் நாங்கள் கால்பதிப்பதுடன் இவற்றில் நல்ல வளர்ச்சி காணவும் நல்ல வாய்ப்புள்ளது. எங்களின் உற்பத்தித் திறன் இலக்கான 20,000 மெகாவாட்டை 2020 ஆம் ஆண்டிற்குள் எட்டிவிட முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறோம்" என அவர் தெரிவித்தார்.

 உற்பத்தியை அதிகரிப்பு

உற்பத்தியை அதிகரிப்பு

மேலும், கோர்பா நிலையத்தின் உற்பத்தித் திறனை பெருக்கிட தேவையான அனைத்து முயற்சிகளையும் திட்டப் பணிகளையும் விரைவாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பிற மின்சார உற்பத்தி நிலையங்கள்

பிற மின்சார உற்பத்தி நிலையங்கள்

இதைத் தவிர, 9240 மெகாவாட் மொத்த திறன் கொண்ட முந்தரா (4620 மெகா வாட், குஜராத்), திரோடா (3300 மெகாவாட், மஹாராஷ்ட்ரா) மற்றும் கவாய் (1320 மெகாவாட், ராஜஸ்தான்) ஆகிய மின் நிலையங்களையும் தன்னகத்தே வைத்துள்ளது. மேலும் 660 மெகாவாட் திறன் கொண்ட மற்றுமொரு நிலையத்தை தயார் நிலையில் மஹாராஷ்டிராவில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+