சுகாதார துறையில் ஐ.டி. சேவைகளை மேம்படுத்த ரூ.6,200 கோடி செலவு !!

டெல்லி: இந்தியாவில் மருத்துவ சேவைகள் அளித்து வரும் நிறுவனங்கள், தங்களது சேவையை மேம்படுத்திக்கொள்ள தகவல் தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்காக இந்த ஆண்டு சுமார் ரூ.6,200 கோடி செலவு செய்யவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவ சேவைகளில் ஐ.டி.யின் பங்கும் ஒரு முக்கியப் பங்கு வகித்து வருகிறது. எப்படி??

ஐ.டி. சேவைகள்

ஐ.டி. சேவைகள்

மருத்துவ சேவைகளுக்குத் தேவையான மென்பொருள்கள், தகவல் மையங்கள், அவுட்ஸோர்சிங் உள்ளிட்ட பல தகவல் தொடர்பு சேவைகள் மருத்துவத் துறையில் உள்ளன.

2014ல் ரூ.6,600 கோடி

2014ல் ரூ.6,600 கோடி

தற்போதைய 2014ல் இதற்கான செலவுகளின் மொத்தத் தொகை ரூ.6,600 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 சதவீதம் அதிகம்

5 சதவீதம் அதிகம்

இந்தச் செலவுத் தொகை கடந்த 2013ஆம் ஆண்டை விட 5 சதவீதம் அதிகமாகும், மேலும் நாட்டில் தற்போது மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது இதனை எதிர்கொள்ளும் மருந்துத்துவ துறை மேம்படுத்தி வருகிறது.

கார்ட்னரின் கணிப்பு

கார்ட்னரின் கணிப்பு

இக்குறித்த ஆய்வை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான கார்ட்னர் நிறுவனம் இந்தக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

ஐ.டி. சர்வீசஸ்

ஐ.டி. சர்வீசஸ்

இதில், ஐ.டி. சேவைகளுக்கு மட்டும் 300 மில்லியன் டாலர் வரை இந்த ஆண்டு செலவாகும். கடந்த 2013ல் இந்தச் செலவுத் தொகை 280 மில்லியன் டாலர் மட்டுமே.

மென்பொருள்கள்

மென்பொருள்கள்

மேலும், மருத்துவ சேவைகளுக்கான மென்பொருள்கள் தயாரிப்புக்கான செலவு, கடந்த 2013ல் 90 மில்லியன் டாலர் ஆகும். இது இந்த ஆண்டு 8.4 சதவீதம் அதிகரித்து 98 மில்லியன் டாலராகும் என்று கார்ட்னர் கணித்துள்ளது.

மருத்துவ சேவைகள் அதிகரிப்பு

மருத்துவ சேவைகள் அதிகரிப்பு

இந்தியாவில் மருத்துவ சேவைகள் நாள்தோறும் அதிகரித்து வருவதாலேயே இதற்கான செலவுகளும் அதிகரித்துள்ளன.

அறிமுக சேவைகள்

அறிமுக சேவைகள்

இ-ஹெல்த், மொபைல் ஹெல்த், டெலிமெடிசின் உள்ளிட்ட சேவைகள் விரைவில் எதிர்பார்க்கப்படுவதாக கார்ட்னர் நிறுவனத்தின் ஆய்வு இயக்குனர் அனுராக் குப்தா தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+