சென்னை: தகவல் தொழிவ்நுட்பம் மற்றும் வன்பொருள் தயாரிப்பு மற்றும் வடிவமைரப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ஐபிஎம் நிறுவனம் புதிய மின்னஞசல் மென்பொருளை வடிவமைத்துள்ளது.
இதில் என்ன புதிதாக இருக்கப்போகிறது என்று நீங்கள் கேட்டும் கேள்வி எனக்கு மட்டும் அல்ல ஐபிஎம் நிறுவனத்திற்கும் கேட்டிருக்கும்.
"வெர்ஸ்"
இந்த புதிய மின்னஞ்சல் மென்பொருளின் பெயர் "வெர்ஸ்" (VERSE), இதில் சமுக வலைதளம் இணைப்பு, கோப்புகள் பரிமாற்றும் மற்றும் நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வண்ணம் அனல்டிக்ஸ்சூம் இணைக்கப்பட்டுள்ளது.
100 மில்லியன் டாலர்
இச்சேவையை உருவாக்க ஐபிஎம் நிறுவனம் சுமார் 100 மில்லியன் டாலர் செலவு செய்துள்ளது.
பிற சேவைகள்
இந்த மின்னஞ்சல் சேவையில் அனல்டிக்ஸ், சமுக வளைதளம், கோப்பு பரிமாற்றும் மட்டும் அல்லாமல் நாள்காட்டி, பாதுகாப்பு சார்ந்த மென்பொருள், சாட்டிங் வசதிகள், விடியோ சாட் என அனைத்தும் ஒரே தளத்தில் கிடைக்கிறது.
நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறை
மேலும் இந்த மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறை பணியாளர்கள் தங்களின் வாடிக்கையாளர் மேம்பாட்டு சேவையை அதிகரிக்க பெரிதும் உதவும் என ஐபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications