டெல்லி: பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் வங்கி ஏடிஎம் நெட்வொர்க் அடுத்த இரண்டு வருடத்தில் 2 மடங்கு அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏடிஎம் இயந்திரங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடி வந்துள்ளது.
நாட்டில் இருக்கும் பெரு மற்றும் சிறு வங்கிகள் தங்களது வாடிக்கையாளர் அனைவருக்கும் ஏடிஎம் சேவைகளை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல புதிய இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவி வருகின்றனர். இதனால் ஏடிஎம் இயந்திரத்தை தயாரிக்கு நிறுவனங்களுக்கு அதிகளவில் ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
ஜன தண் யோஜனா திட்டம்
பிரதமரின் இத்திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்கும் பட்சத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பண புழக்கும் அதிகரிக்கும். மேலும் இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் மத்திய அரசு வழங்கும் வங்கிச் சேவைகளின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும். எப்படி??
ரூபே
மத்திய அரசு உருவாக்கிய பண பரிமாற்ற திட்டமான ரூபே சேவை நாட்டு மக்கள் மற்றும் வங்கிகளிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் தற்போது 40.9 கோடி ரூபே டெபிட் கார்டு செயல்பாட்டில் உள்ளது. அது மட்டும் அல்லாமல் புதிதாக 15 கோடி டெபிட் கார்டுகள் வங்கிகள் பெற்றுள்ளது.
அரசு வங்கிகள்
தற்போது ஜன தண் யோஜனா திட்டத்தின் மூலம் திறக்கப்படும் வங்கி கணக்குகள் அனைத்தும் பொதுத்துறை வங்கிகளின் மூலம் மட்டுமே திறக்கப்படுகிறது.
அதிகரிப்பு
மேலும் இத்திட்டத்தின் மூலம் இலவசமாக 7.5 கோடி பேருக்கு வங்கி கணக்கு திறக்கப்படும் திட்ட இலக்கும் தற்போது 10 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதில் சராசரியாக ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ. 750 என்ற வகையில் மொத்தமாக ரூ.6,015 கோடி டெபாசிட் வசூல் செய்யப்பட்டுள்ளது.
அரசு திட்டங்களின் ஆதிக்கம்
இந்தியாவில் தனியார் வங்கி மற்றும் வங்கி கிளைகளை விட பொதுத்துறை வங்கிகள் தான் அதிகம். ஆகையால் மின்னணு பரிமாற்றம் முதல் ஏடிஎம் வரை அனைத்தும் அரசு நிறுவனங்கள் சேவை அளிக்கும்போது தனியார் துறையின் ஆதிக்கம் குறைவாகவே இருக்கும்.
பிற துறைகள்
வங்கிச்சேவையை போல் பிற எல்லா துறைகளிலும் அரசு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகளவில் இருந்தால் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிறைவான சேவை கிடைக்கும். மேலும் நாட்டின் வளர்ச்சி பொருளாதார ரீதியிலும், தொழில்நுட்ப ரீதியிலும் சிறப்புடன் செயல்படும்.
பாடத்தின் விலைவுகள்
தமிழ் குட்ரிட்டன்ஸ் பேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்!!
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications