மும்பை: இந்திய பங்குச்சந்தையில் மொத்த முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 100 டிரில்லியன் ரூபாய் (100 இலட்சம் கோடி) அளவு உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் இந்திய பங்குசந்தை உலகின் டாப் 10 சந்தைகளின் பட்டியலில் முதன் முறையாக நுழைந்துள்ளது.
அதிலும் கடந்த பத்து வருடங்களில் இந்திய சந்தையில் செய்த முதலீகளை பார்க்கும் போது சுமார் 10 மடங்கு உயர்வை பதிவு செய்துள்ளது.
டாப் 10 பங்கு சந்தைகள்
உலகளவில் டாப் 10 பங்குசந்தைகளுகளில் முதல் இடத்தில் இருப்பது நியூயார்க் பங்கு சந்தை இதன் முதலீட்டு மதிப்பு 19.1 டிரில்லியன் டாலர். இதை தொடர்ந்து நாஸ்டாக் ஓஎம்எக்ஸ், ஜப்பான் எக்ஸ்சேன்ஞ் குரூப் ஆஃப் டோக்கியோ, யூரோநெக்ஸ்ட், ஹாங்காங் எக்ஸ்சேஞ் ஆகியவை டாப் 5 இடங்களில் உள்ளது. இப்பட்டியலில் இந்திய பங்கு சந்தை 10வது இடத்தில் உள்ளது.
வர்த்தகம் துவக்கம்
இன்று காலை வர்த்தக துவக்கி 5 நிமிடங்களில் மும்பை பங்கு சந்தை 190 புள்ளிகள் வரை உயர்ந்து சந்தை முதலீட்டு தொகை 100 இலட்சம் கோடியை தொட்டது.
வரலாறு
11 வருடத்திற்கு முன்பு 2003ஆம் ஆண்டு இந்திய பங்கு சந்தை சந்தை முதலீட்டில் 10 இலட்சம் கோடியை எட்டியது. அதை தொடர்ந்து 2009ஆம் ஆண்டில் 50 இலட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த 5 வருடத்தில் இதன் மதிப்பு இரண்டு மடங்கு அளவு உயர்ந்தது.
30 நிறுவனங்கள்
இதில் சந்தையில் உள்ள டாப் 30 நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டும் சுமார் 47 இலட்சம் கோடி ஆகும். இப்பட்டியலில் முதன்மையானவை டிசிஎஸ் 5 இலட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்நிறுவனத்தை தொடர்ந்து ஓஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் ஆகிய நிறுவனங்கள் டாப் 3 இடங்களை பிடித்துள்ளது.
முதலீட்டாளர்கள்
சந்தை முதலீட்டில் 50 சதவீதம் நிறுவனங்களுடையதாகவும், 20 சதவீதம் அன்னிய நிறுவனங்களுடையதாகவும், மீதமுள்ள 30 சதவீதம் இந்தியாவில் உள்ள சில்லறை முதலீட்டாளர்களுடையாதாகும்.
3 இலட்சம் கோடி ரூபாய்
சந்தையில் 3 இலட்சம் கோடி ரூபாய் சந்தை முதலீடு கொண்டது இரு நிறுவனங்கள் மட்டுமே அவை மத்திய அரசின் ஓஎன்ஜிசி மற்றும் தனியார் துறை பல்பொருள் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியனவாகும்.
2 இலட்சம் கோட் ரூபாய்
சந்தையில் 2 இலட்சம் கோடி ரூபாய் சந்தை முதலீடு கொண்டது பல நிறுவனங்கள் அவை ஐடிசி, இன்ஃபோசிஸ், ஹெச்டிஎப்சி வங்கி, எஸ்பிஐ மற்றும் கோல் இந்தியா. தவிர, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, சன் பார்மா, ஹிந்துஸ்தான் லீவர், பார்தி ஏர்டெல், எல் & டி, விப்ரோ, டாடா மோட்டார்ஸ், எச்சிஎல் டெக், என்டிபிசி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவாகும்.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications