மும்பை: விஜய் மல்லையா தலைமை வகிக்கும் யு.பி குரூப்ஸ் குழுமத்தின், கிளை நிறுவனமான மங்களுரூ கெமிக்கல் அண்டு பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மன் பதவியில் இருந்து விஜய் மல்லையா விலகிக்கொண்டார்.
இந்த அறிவிப்பு வெளிவந்த சில மணிநேங்களில் இந்நிறுவன பங்குகளின் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. 80 ரூபாயாக இருந்த இந்நிறுவன பங்குகள் 92 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
மங்களுரூ கெமிக்கல் அண்டு பெர்டிலைசர்ஸ்
கர்நாடக மாநிலத்தில் கெமிக்கல் பெர்டிலைசர்ஸ் தயாரிக்கும் ஓரே நிறுவனம் மங்களுரூ கெமிக்கல் அண்டு பெர்டிலைசர்ஸ் நிறுவனம் தான். இந்நிறுவனத்தின் வருந்திர வருமானம் 2,523.83 கோடியாகும்.
தீபக் பெர்டிலைசர்ஸ்
சமீபத்தில் இந்நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை பெற தீபக் பெர்டிலைசர்ஸ் மற்றும் ஜூவாரி அக்ரோ நிறுவனம் கைபற்ற முயற்சி செய்தது. ஆனால் மல்லையா அவர்கள் ஜுவார் நிறுவனத்துடன் இணைந்துக்கொண்டதால் இந்நிறுவனத்தின் நிர்வாக பொறுப்புகள் மல்லையாவிடமே திரும்ப கிடைத்தது.
பங்கு இருப்பு
மேலும் இந்நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை தீபக் பெர்டிலைசர்ஸ் பெற்றுள்ளது, அதை தொடர்ந்து, யுபி குருப் 22 சதவீத பங்குகளும், 16 சதவீத பங்குகள் ஜூவாரி நிறுவனமும் பெற்றுள்ளது. மீதமுள்ள பங்குகள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
நிர்வாக உரிமை
தற்போதுள்ள நிலையில் இந்நிறுவனத்தின் அதிகப்படியான பங்குகள் தீபக் பெர்டிலைசர்ஸ் நிறுவனத்துடன் இருப்பதால் மல்லையா அவர்கள் நிறுவனத்தின் சேர்மன் பதவியில் இருந்து விலகும் படி ஆனது.
பின்னடைவு
இந்நிறுவனத்தில் நீண்ட காலமாக சேர்மன் பதவியில் இருந்த இவர் கடந்த வார நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் நடந்த பொதுவாக்கெடுப்பில் 12இல் 9 பேர் இவரை நிர்வாக தலைவர் பதவியில் இருந்து விலகும் படி வாக்களித்தனர். இது இவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications