டெல்லி: மத்திய அரசு இன்று பொட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை அதிகரித்தது. இதன் படி பெட்ரோல் லீட்டருக்கு 2.25 ரூபாய் மற்றும் டீசல் லீட்டருக்கு 1 ரூபாய் என்ற வீதத்தில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வரி உயர்வு சில்லறை விற்பனையில் பாதிப்பு இருக்காது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று வாரத்தில் கலால் வரி இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது இதன் மூலம் சுமார் 4000 கோடி ரூபாய் மத்திய அரசு அதிகப்படியாக நிதி திரட்டியுள்ளது.
மேலும் உலக சந்கைகளில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக குறைந்துள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்து புதிய பட்ஜெட்டுக்கு தேவைப்படும் 10,000 கோடி நிதி திரட்டும் இலக்கை அடைய முயற்சி செய்து வருகிறது.
மத்திய அரசு விதிக்கப்பட்ட புதிய வதிகளின் படி கலால் வரி பெட்ரோல் லீட்டருக்கு 3.85 ரூபாயில் இருந்து 6.10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதேபோல் டீசலுக்கு 5.25 ரூபாயில் இருந்து 6.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications