மும்பை: 2014ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு நேர்முக தேர்வுகள் ஐஐடி கல்லூரிகளில் திங்கட்கிழமை துவங்கியது. இவ்வருடம் ஐஐடி மாணவர்களுக்கு 15-20 சதவீதம் அதிக வேலைவாய்ப்புகள், சராசரி சம்பளத்தைவிட 10-20 சதவீதம் அதிகமான சம்பளம் மற்றும் 30 சதவீதம் அதிகமான வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளது.
நேர்முக தேர்வு துவங்கி 20 மணிநேரத்தில் பேஸ்புக் நிறுவனம் 1.55 கோடி சம்பளம் போனஸ் மற்றும் நிறுவன பங்குகளுடன் அமெரிக்காவில் வேலை செய்ய நியமன ஆணையை வழங்கியுள்ளது.
உயரிய சம்பளம்
இதுவே ஐஐடி கல்லூரிகளில் கொடுக்கப்பட்ட அதிகப்படியான சம்பளம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐஐடி காரக்பூர் மற்றும் பாம்பே
பேஸ்புக் நிறுவனத்தின் கலிபோர்னியா அலுவலகத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிய ஐஐடி காரக்பூர் கல்லூரியில் இருந்து 3 பேரும், ஐஐடி கல்லூரி மாணவர்களில் சிலரும் பேஸ்புக் தேர்ந்தெடுத்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதுகுறித்து எவ்விதமான கருத்தும் பேஸ்புக் வெளியிடவில்லை.
பிற நிறுவனங்கள்
பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து சாம்சங் ரூ.93 இலட்சம், மைக்ரோசாப்ட் ரூ.80 இலட்சம், ஆரக்கிள் ரூ.78 இலட்சம் மற்றும் நிறுவன பங்குகள், கூகிள் ரூ.78 இலட்சம் மற்றும் விசா நிறுவனம் ரூ.87 இலட்சம் அளவில் சம்பளத்தை அளித்து ஐஐடி மாணவர்களை தங்களது நிறுவனங்களில் இணைத்துள்ளது.
77.5 இலட்சம் ரூபாய்
கடந்த வருடம் ஐஐடி புவனேஸ்வர் மாணவருக்கு அதிகப்படியாக 77.5 இலட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளது ஒரு பன்னாட்டு நிறுவனம், இவ்வருடம் ஐஐடி கல்லூரிகளில் சம்பளம் 36 சதவீதம் உயர்ந்து 1.55 கோடி ரூபாயாக உள்ளது.
இரண்டாம் கட்ட வேலைவாய்ப்புகள்
மேலும் ஐஐடி கல்லூரிகளில் இரண்டாம் கட்ட வேலை வாய்ப்புகளுக்கான நேர்முக தேர்வு ஐனவரி மாதம் துவங்க உள்ளது. இது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் வரை தொடரும்.
முதல் 20 நாள்
கடந்த வருடம் முதல் 20 நாட்களில் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தது. இவ்வருடம் இதேக்காலகட்டத்தில் 1200 பேருக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிகிறது.
100 நிறுவனங்கள்
ஐஐடி மாணவர்களை தங்களது நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ள 100க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் காத்துக்கிடக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications