பெங்களுரூ: இந்தியாவின் டாப் பணக்காரர்களின் ஒருவரான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி புதிய துறைகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்து வருகிறார். இதுவரை இவர் இண்டர்நெட் மற்றும் டெக்னாலஜி சார்ந்த நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்து வந்தார் ஆனால் கடந்த சில வாரங்களில் ரியல் எஸ்டேட், இண்சூரன்ஸ் நிறுவனங்களில் போன்ற புதிய துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்.
தற்போது நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் கிளை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லைப் நிறுவனத்தில் 100 மில்லியன் டாலர் அதாவது 600 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறார் அசிம் பிரேம்ஜி.
முதலீட்டு விரிவாக்கம்
அசிம் பிரேம்ஜி இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் முக்கிய இடம் வகித்தாலும், தனது தனிப்பட்ட முதலீட்டு நிறுவனமான பிரேம்ஜி இன்வெஸ்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் பல தொழில்நுட்பம், இகாமர்ஸ், வங்கி பரிமாற்றம், ரியல் எஸ்டேட் என பல துறைகளில் தனது முதலீட்டை வரிவாக்கம் செய்து வருகிறார்.
ஹெச்டிஎஃப்சி லைப்
இந்நிறுவனம் இந்தியாவில், பிரட்டன் நாட்டின் ஸ்டேன்டர்டு லைப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் இன்சூரன்ஸ் சேவை வழங்கி வருகிறது. இக்கூட்டணியில் ஸ்டேன்டர்டு லைப் நிறுவனம் 26 சதவீத பங்குகளும், ஹெச்டிஎஃப்சி நிறுவனம் 72.37 சதவீத பங்குகளும் வைத்துள்ளது.
பிரேம்ஜி இன்வெஸ்ட்ஸ்
இந்நிலையில் ஹெச்டிஎஃப்சி நிறுவனம், ஹெச்டிஎஃப்சி லைப் நிறுவனத்தில் சிறு பகுதி பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளது இதனை கைபற்ற பிரேம்ஜி இன்வெஸ்ட்ஸ் நிறுவனம் கடுமையாக முயற்சி செய்து வருகிறது.
பங்கு விலை உயர்வு
மேலும் இந்நிறுவனத்தின் பங்குகள் அடுத்த ஒரு வருடத்தில் சுமார் 20 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என முதலீட்டுச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏடிஎம்
பிரேம்ஜி இன்வெஸ்ட்ஸ் நிறுவனம் ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் இணைவதன் மூலம் இவ்வங்கி நாட்டில் புதியதாக அமைக்கப்படும் அனைத்து ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் பரிமாற்ற சேவையை, பிரேம்ஜி முதலீடு செய்துள்ள எஃப்எஸ்எஸ் நிறுவனத்துடன் இணைத்து விட முடியும்.
முதல் இன்சூரன்ஸ் நிறுவனம்
ஹெச்டிஎஃப்சி லைப் நிறுவனம் இந்தியாவின் முதல் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமாகும். இந்நிறுவனம் 14 வருடத்திற்கு முன்னாள் இந்தியாவில் துவங்கப்பட்டது, இன்றைய நாள் வரை 500 கிளைகள் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications