பெங்களுரூ: உலகளவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், இந்தியா முதன்மையானவை. இந்தியாவில் பெரு நிறுவனங்களின் எண்ணிக்கையை விட, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எஸ்எம்இ)எண்ணிக்கை தான் மிகவும் அதிகம். இத்தகைய நிறுவனங்களின் வர்த்தகத்தை பெருக்கவும், இந்திய அளவிலும், உலகளவிலும் அடையாளம் செய்யவும், விளம்பரம் செய்ய உதவும் வகையில் இன்டர்நெட் நிறுவனங்கள் உதவி வருகிறது.
இத்தகைய முயற்சியில் உலகின் முன்னணி இன்டர்நெட் தேடல் நிறுவனமான கூகிள் இறங்கியுள்ளது குறிப்பிடதக்கது. இதற்காக கூகிள் ஒரு புதிய அப்ளிகேஷனையும் உருவாக்கியுள்ளது. இதன் பெயர் கூகிள் மை பிஸ்னஸ்.
கூகிள் மை பிஸ்னஸ்
இந்த அப்ளிகேஷனை மொபைல் மற்றும் கனிணி மூலம் பயன்படுத்த முடியும், இதில் ஒரு நிறுவனத்துடைய விபரங்கள் மற்றும் அன்றாட நடக்கு செய்திகள் மற்றும் தகவல்களை இதில் பதிவு செய்யலாம். இத்தகவல் கூகிள் சர்ச், மேப்ஸ் மற்றும் கூகிள் பிலஸ் ஆகியவற்றில் பதிவேற்றப்படும்.
சூரியநாரயண கொடுகுலா
இதுக்குறித்து கூகிள் இந்தியா நிறுவனத்தின், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் விற்பனை பிரிவின் தலைவர் சூரியநாரயண கொடுகுலா கூறுகையில், "கூகிள் நிறுவனத்திற்கு இந்தியா மிகமுக்கியமான சந்தை, நாட்டில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வர்த்தகத்தை மேம்படுத்த கூகிள் நிறுவனம் இப்புதிய திட்டத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது" என் கூறினார்.
டிஜிட்டல் இந்தியா
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் முக்கிய பங்காக கூகிள் மை பிஸ்னஸ் இடம்பெறும், இந்த அப்ளிகேஷன் மூலம் இன்டர்நெட்டின் உதவியுடன் அதிகமான வாடிக்கையாளர்களையும் வியாபாரத்தை பெருக்க முடியும்.
2 மில்லியன் வாடிக்கையாளர்
கூகிள் நிறுவன தகவல் படி உலகளவில் இந்நிறுவனத்தின் விளம்பர சேவை தளத்தின் உதவியுடன் சுமார் 2 மில்லியன் வாடிக்கையாளர்கள் தங்களின் வியாபாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.
பெங்களுரூ
மேலும் இத்திட்டத்தின் மூலம் தனது வியாபாரத்தில் வெற்றிப் பெற்றவர்களை கூகிள் நிறுவனம் எஸ்எம்இ ஹீரோஸ் என்ற பெயரில் பெங்களுரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது.
பேஸ்புக்
இதே முறையை சமுக வலைதளத்தின் ஜாம்பவான் பேஸ்புக் நிறுவனமும் கையாடு வருகிறது இதற்கான பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைவர் நிதியியல் அதிகாரிகள் பிரதமர் மோடி மற்றும் பிற துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கடந்த மாதம் இந்தியாவில் சந்தித்தனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications