கிஸான் விகாஸ் பத்ரா திட்டத்தை வங்கி டெப்பாசிட் சிறந்தது!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: கிஸான் விகாஸ் பத்ரா திட்டத்தில் பணமோசடி உருவாக பல வாய்ப்புகள் உள்ளது என தெரிந்திருந்தும் கூட இந்த திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் இதற்கு முன் நிறுத்தப்பட்டதற்கு முக்கிய காரணமே இந்த பணமோசடி வாய்ப்புகள் தான்.

 

அடிப்படையில் நிரந்தர வட்டியை ஈட்டி தரும் முதலீட்டை நாடி ஒருவர் செல்லும் போது அவர் முக்கியமாக கருதுவது - வட்டி விகிதங்கள், எளிதில் பணமாக்கக்கூடிய தன்மை மற்றும் வரி விலக்கு வாய்ப்புகள் ஆகியவைகள் தான். சரி இந்த மூன்று விஷயத்திலுமே நமக்கு சாதகமாக இல்லாத முதலீட்டில் ஏன் ஒருவர் முதலீடு செய்ய வேண்டும்?

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிஸான் விகாஸ் பத்ராவை விட வங்கி டெபாசிட்கள் சிறந்தாக கருதப்படுவதற்கான காரணங்களை பார்க்கலாமா?

மோசமான வட்டி விகிதங்கள்

மோசமான வட்டி விகிதங்கள்

புதிய கிஸான் விகாஸ் பத்ராவின் ஆயுட்காலம் எட்டு வருடங்களும் நான்கு மாதங்களாகும். நாம் முதலீடு செய்த தொகை இந்த காலத்தில் இரண்டு மடங்காகி விடும். அப்படி பார்க்கும்போது வருடாந்திர வட்டி தோராயமாக 8.68 சதவீதமாக வரும். இதே பணத்தை நீங்கள் ஃபிக்சட் டெபாசிட்டில் போட்டால், 8.9 சதவீதம் என சற்று கூடுதலான வட்டி விகிதம் கிடைக்கும். இதுவே மூத்த குடிமகன்களாக இருந்தால் கூடுதலாக 0.50 சதவீதமும் அளிக்கப்படும். ஒவ்வொரு காலான்டிற்கும் கூட்டு வட்டி அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுவதால், அதே காலத்திற்கு இது கூடுதல் வருமானத்தை அளிக்கும்.

எளிதாக பணமாக்கக்கூடிய தன்மை

எளிதாக பணமாக்கக்கூடிய தன்மை

வங்கி டெபாசிட்களுடன் ஒப்பிடுகையில் கிஸான் விகாஸ் பத்ராவின் எளிதாக பணமாக்கக்கூடிய தன்மை சரியானதாக இல்லை. 2.5 வருடங்களாக (அல்லது உடைமையாளரின் மரணம்) உள்ள லாக்-இன் காலம் முடியும் வரை ப்ரீ-மெச்சூர் செய்ய அனுமதிப்பதில்லை. ஆனால் வங்கியிலோ இந்த பிரச்சனை கிடையாது. ஃபிக்சட் டெபாசிட்டை ப்ரீ-மெச்சூர் செய்யும் போது சில வங்கிகள் தண்டத் தொகையும் கூட வசூலிப்பதில்லை. இது வாடிக்கையாளர்களின் மத்தியில் கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்தும்.

மூத்த குடிமகன்களுக்கு கூடுதல் வட்டி விகிதங்கள்
 

மூத்த குடிமகன்களுக்கு கூடுதல் வட்டி விகிதங்கள்

மூத்த குடிமகன்களாக இருந்தால் கூடுதலாக 0.50 சதவீதத்தை வங்கிகள் அளிக்கின்றன. கிஸான் விகாஸ் பத்ரா திட்டத்தின் கீழ் மூத்த குடிமகன்களுக்கு இவ்வகை சலுகைகள் கிடையாது.

வங்கி டெபாசிட்களுக்கு பிரிவு 80C பயன்கள் உள்ளது

வங்கி டெபாசிட்களுக்கு பிரிவு 80C பயன்கள் உள்ளது

வரி விலக்கு வங்கி டெபாசிட்களினால் பிரிவு 80C-யின் கீழ் வரி விலக்கு பயன்கள் கிடைக்கும். அதாவது கிஸான் விகாஸ் பத்ரா வழங்கும் அதே விகித அளவிற்கு தந்து அதனுடன் சேர்த்து, பிரிவு 80C-யின் கீழ், ரூ.1.5 லட்சம் வரை விலக்கும் அளிக்கப்படும். ஆனால் KVP திட்டத்தில் இவ்வகை பயன்கள் ஏதும் கிடையாது.

வரி சேமிப்பு திறன்

வரி சேமிப்பு திறன்

கிஸான் விகாஸ் பத்ரா மூலமாக வரும் முழு வட்டி தொகை மீதும் வரி பிடிக்கப்படும். PPF-ல் குவிந்துள்ள வட்டியின் மீது வரி பிடிப்பு இல்லாததை போல், இதில் எந்த ஒரு பயனும் இல்லை. இது வங்கி டெபாசிட்களுக்கும் பொருந்தும்.

முடிவுரை

முடிவுரை

அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் மிகவும் பாதுகாப்பான முதலீடு என்ற ஒரே காரணத்தை தவிர, KVP திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதற்கான காரணம் எந்த முக்கிய காரணமும் தெரியவில்லை. ஏன் இந்தியாவில், வங்கி டெபாசிட்களையும் கூட அரசாங்கம் தானே கவனித்து கொள்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Reasons Why Bank Deposits are Better Than the New Kissan Vikas Patra

The Kissan Vikas Patra has been relaunched amidst a lot of worries that it could lead to money laundering into the scheme, one reason which is why it was discontinued earlier.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X