சென்னை: கடந்த சில மாதங்களில், வங்கி டெபாசிட்களின் மீதான வட்டி விகிதங்கள் எல்லாம் குறைந்தது 50 அடிப்படை புள்ளிகளாவது குறைந்துள்ளது. குறிப்பாக நடுத்தரம் முதல் நீண்ட கால டெபாசிட்களுக்கு. எச்.டி.ஃஎப்.சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி போன்ற பல தனியார் துறை வங்கிகள் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா போன்ற அரசாங்க வங்கிகளும் வட்டி விகிதங்களை 9 சதவீதத்திற்கு கீழாக குறைத்துள்ளது.
ஆனால் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு இன்னமும் 9 சதவீதத்திற்கு மேல் வட்டி விகிதம் அளிக்கும் அரசாங்க வங்கிகள் இன்னமும் உண்டு, இதோ!
அலஹாபாத் வங்கி
1 முதல் 4 வருட டெபாசிட்களுக்கு 9.05 சதவீத வட்டி விகிதத்தை அளிக்கிறது அலஹாபாத் வங்கி. மற்ற அனைத்து வைப்பு காலத்திற்கும் 9 சதவீதத்திற்கு கீழான வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
ஆந்திரா வங்கி
ஒன்று மற்றும் இரண்டு வருட டெபாசிட்களுக்கு 9 சதவீத வட்டி விகிதத்தை அளிக்கிறது ஆந்திரா வங்கி. இதை விட கூடுதல் வைப்பு காலத்திற்கு 9 சதவீதத்திற்கு கீழான வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
இந்தியாவில் உள்ள அரசாங்க வங்கியிலேயே ஃபிக்சட் டெபாசிட்களுக்கு அதிகமான வட்டியை அளித்திடும் வங்கியாக விளங்குகிறது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா. ஒன்று மற்றும் இரண்டு வருட டெபாசிட்களுக்கு 9.15 சதவீத வட்டி விகிதத்தை இது அளிக்கிறது.
கார்ப்பரேஷன் வங்கி
2 மற்றும் 3 வருட டெபாசிட்களுக்கு 9 சதவீத வட்டி விகிதத்தை அளிக்கிறது கார்ப்பரேஷன் வங்கி. மற்ற அனைத்து வைப்பு காலத்திற்கும் 9 சதவீதத்திற்கு கீழான வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
தேனா வங்கி
1 முதல் 5 வருட வைப்பு காலத்தை கொண்டுள்ள பல டெபாசிட்களுக்கு 9 சதவீத வட்டி விகிதத்தை அளிக்கிறது தேனா வங்கி.
இந்தியன் வங்கி
ஒன்று மற்றும் இரண்டு வருட டெபாசிட்களுக்கு 9 சதவீத வட்டி விகிதத்தை அளிக்கிறது இந்தியன் வங்கி. மற்ற அனைத்து வைப்பு காலத்திற்கும் 8.75 சதவீத வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
1, 2 மற்றும் 3 வருட டெபாசிட்களுக்கு 9 சதவீத வட்டி விகிதத்தை அளிக்கிறது பஞ்சாப் நேஷனல் வங்கி. இதை விட கூடுதல் வைப்பு காலத்திற்கு 9 சதவீதத்திற்கு கீழான வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
இதர வங்கிகள்
சிண்டிகேட் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற பல பொதுத்துறை வங்கிகளும் 9 சதவீதத்திற்கு கீழான வட்டி விகிதங்களை அளிக்கப்படுகிறது.
நிறுவன வைப்பு நிதிகள்
கடந்த சில மாதங்களாக வட்டி விகிதங்கள் சரிந்துள்ள நிலையில், இது மேலும் தொடரக்கூடும். அதனால் 3-5 வருட வைப்பு காலத்தை தேர்ந்தெடுங்கள். வெறுமனே வங்கி வைப்புகளை மட்டும் கருதாமல் தரம் வாய்ந்த நிறுவன வைப்புகளையும் கருதுங்கள். இதனால் வட்டி விகிதங்கள் சரிவு இடர்பாட்டில் இருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யலாம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications