டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் துவங்கிய நாள் முதல், மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. இந்த திட்டம் வெற்றியடைவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசும், பொதுத்துறை வங்கிகளும் அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருகிறது.
இந்தியாவில் இதுவரை 7 கோடிப்பேருக்கு வங்கி கணக்குகள் இத்திட்டத்தின் மூலம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் எண்ணிக்கை 10 கோடியை எட்ட பொதுத்துறை வங்கிகள் முயற்ச்சி செய்து வருகிறது.
PMJDY திட்டத்தில் அப்படி என்ன பயன்கள் உள்ளது?? வாங்க ஒரு ரவுண்டு பார்ப்போம்...
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்றால் என்ன?
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்பது அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட நிதிசார்ந்த சேர்க்கை திட்டமாகும். நிதிசார்ந்த சேவைகள் மற்றும் வங்கி சேவைகளை அனைத்து இந்தியர்களும் பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பொதுத்துறை வங்கிகள்
நாட்டிலுள்ள பல வங்கிகளிலும் இந்த கணக்குகளை திறந்து கொள்ளலாம். சொல்லபோனால், IDBI மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற பல வங்கிகள் இந்த கணக்குகளை துரிதமாக திறந்து, நிதிசார்ந்த சேர்க்கை திட்டத்தை வெற்றியடைய முனைந்துள்ளனர்.
விபத்து காப்புறுதி
வங்கி கணக்குடன் காப்புறுதி என்பது பொதுவாக நாம் கேள்வி படாத ஒன்றாகும். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் காபுருதியை அளிக்கிறது. இந்த விபத்து காப்புறுதியால் ரூ. 1 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம். இது அனைவருக்கும் பெரிய பயனாக இருக்கும்; குறிப்பாக வறுமையான குடும்பத்தில் சம்பாதிக்கும் முக்கியமான நபர் விபத்தில் மரணிக்கும் போது.
குறைந்தபட்ச இருப்பு
இன்றைய தேதியில் சேமிப்பு வங்கி கணக்குகள் திறப்பதற்கு, சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டும். ஏன், அரசாங்கத்துக்கு சொந்தமான வங்கிகளில் கூட இது தான் விதிமுறையாக உள்ளது. அதுவே தனியார் துறை வங்கிகள் அனைத்தும் குறைந்தபட்ச இருப்பு தொகையை கூடுதலாக நிர்ணயித்துள்ளது. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கை திறந்தால், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க தேவையில்லை.
ரூ.30,000/- வரையிலான ஆயுள் காப்புறுதி
பல பேருக்கு இது ஒரு பெரிய தொகையாக இல்லாவிட்டாலும் கூட, வறுமையில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக இது பெரிய தொகையே.
ஊக்குவிப்புத் தொகைகள் மற்றும் இதர பயன்கள்
எல்.பி.ஜி. மாணியம் மற்றும் இதர ஊக்குவிப்புத் தொகைகள் போன்ற அரசாங்க திட்டங்களின் கீழ் தனிப்பட்ட நபர்களுக்கு கிடைக்கும் அனைத்து தொகைகளும், இனி அவர்களின் PMJDY கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்படும். இது பெரிதும் பயனை அளிக்கும். இதனால் ஒளிவின்மை உறுதி செய்யப்படும்.
சுலப பணமாற்றல்
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் பணமாற்றமும் சாத்தியம். இது மிகப்பெரிய பயனாகும்; குறிப்பாக வறுமையில் வாழ்பவர்களுக்கு.
ஓவர்ட்ராப்ட் வசதி
இந்த கணக்கு ஓவர்ட்ராப்ட் வசதியையும் அளிக்கிறது. அவசர காலத்தில் மூலதனத்தை இது அணுக வைக்கும். இருப்பினும், 6 மாத கால வெற்றிகரமான செயல்பாட்டிற்கு பிறகே இந்த வசதி கிடைக்கும்.
பிற நிதி சார்ந்த சேவைகள் பயன்பாடு
PMJDY கணக்கை கொண்டவர்கள் பென்ஷன் மற்றும் இதர காப்பீடு சேவைகளை சுலபமாக அணுகலாம்.


Click it and Unblock the Notifications