விமான சேவைகளை குறைத்துக் கொண்டது ஸ்பைஸ்ஜெட்!!
மும்பை: இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட், தான் எதிர்கொண்டுவரும் நஷ்டத்தை சரி செய்யதன்னிடம் இருந்த 35 போயிங் விமானங்களை, செப்டம்பர் மாதத்தில் 22-24 ஆக குறைக்க முடிவு செய்துள்ளது.

நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் நிறுவனத்தின் செலவுகளை குறைக்க, குறைந்தஅளவிலான விமான போக்குவரத்தை இன்னும் சில காலத்திற்கு தொடரப் போகிறோம் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளுக்கு நஷ்டத்தை சந்தித்து வருகிறது இந்த விமான சேவை. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதனை மீண்டும் விரிவாக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. ஆனால் நீண்ட காலத்துக்கு குறைந்த அளவில் விமான சேவைகளை இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சஞ்சீவ் கபூர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications