மும்பை: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா டிசம்பர் 8 முதல் குறிப்பிட்ட சில முதிர்ச்சி காலங்களை கொண்டு டெபாசிட்களின் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
ரூ.1 கோடிக்கு குறைவான டெபாசிட்களுக்கான வட்டியில் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வட்டி விகித குறைப்பு அனைத்தும் ஒரு வருடத்திற்கும் அதிகமான முதிர்வு காலம் கொண்ட திட்டங்களுக்கும் மட்டுமே. குறுகிய கால திட்டத்திற்கு விலக்கு அளித்துள்ளது வங்கி நிர்வாகம்.
முதிர்வு காலம்
ஒன்று முதல் மூன்று வருட முதிர்வு காலம் கொண்ட டெபாசிட்களுக்கு புதிய வட்டி விகிதமாக 8.75% (வருடாந்திர) நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தையில் நடந்த ஒழுங்குமுறை திட்ட அறிக்கையில் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
8.75% வட்டி விகிதம்
மூன்று முதல் ஐந்து வருட முதிர்வு காலத்தை கொண்டுள்ள டெபாசிட்களை பொறுத்த வரை, அதன் வட்டி விகிதத்தை 8.75 சதவீதத்தில் இருந்து 8.50 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது.
5 வருடத்திற்கு மேல்
ஐந்து வருடம் மற்றும் அதற்கு மேலான காலத்திற்கு, 8.50 சதவீதத்தில் இருந்த வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக மாற்றியுள்ளது.
என்ஆர்இ
ஒரு வருடம் மற்றும் அதற்கு கூடுதலான காலத்தை கொண்டுள்ள NRE டெபாசிட்களுக்கும், மேற்கூறிய திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் பொருந்தும் என வங்கி கூறியுள்ளது.
குறுகிய கால வைப்புகள்
இவ்வகை குறுகிய கால வைப்புகளுக்கான வட்டி விகிதத்தின் மீது இது வரை உள்ள நிலையை தொடர வங்கி முடிவெடுத்துள்ளது. தற்போதைய வீதங்கள் கீழ்வருமாறு: 7-45 நாட்களுக்கு 7%; 46-179 நாட்களுக்கு 7%; 180-210 நாட்களுக்கு 7.25%; 211 நாட்களுக்கு மேலும் ஒரு வருடத்திற்கு குறைவாகவும் - 7.50%.
தனியார் வங்கி
ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய நிதியியல் கொள்கையின் எதிரோலியாக கடந்த வாரம் தனியார் வங்கிகளான ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி வைப்பு நிதிகளுக்கான வட்டி வகிதங்களை குறைத்தது. இதை தொடர்ந்து இன்று பொதுத்துறை வங்கிகளும் வட்டி வகிதங்களை மாற்றியுள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications