டெல்லி: இந்தியாவில் ஏற்கனவே பல விமான போக்குவரத்து நிறுவனங்கள் இருக்கும் நிலையில், டாடா குழுமம் பெரும் முதலீட்டுடன் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்தாரா என்னும் உலகளாவிய புதிய விமான சேவை நிறுவனத்தை துவக்கியுள்ளது. இக்கூட்டணி இந்நியாவில் விமான நிறுவனத்தை துவங்க அனைத்த விதிமான ஒப்புதல்களும் பெற்றுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி கூறுகையில் விஸ்தாரா நிறுவனம் டிசம்பர் மாத இறுதியில் அல்லது 2015ஆம் ஆண்டு துவக்கத்தில் முழுமையாக செயல்பட துவங்கும் என தெரிவித்தார்.
சோதனையில் உள்ளது விஸ்தாரா...
இந்நிறுவனம் இந்திய வானில் பறப்பதற்கு சில முக்கிய உரிமங்கள் பெற சோதனையில் உட்படுத்தப்பட்டு உள்ளது. இதன் படி இந்தியாவில் 5 வருமானம் இல்லாத வழித்தடங்களில் 10 மணி நேர பயணத்திலும், பயணிகளின் அவசர கால வெளியேற்றம் போன்ற நடவடிக்கைகளை சோதனை செய்து வருகிறது.
விஸ்தாரா
விமான சேவை துவக்கம் குறித்து இந்நிறுவனம் கூறுகையில், நிறுவனம் இந்தியா வானில் பறப்பதற்கான இறுதிகட்ட ஒப்புதல்களை பெறும் நிலையில் உள்ளது. மேலும் ஒப்புதல்கள் கிடைத்த ஒரு வாரக்காலத்தில் முழுமையான சேவையை துவங்க தயாராக உள்ளோம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு வருட காலம்
டாடா குரூப் நிறுவனம் ஒரு வருடத்திற்கு முன் இந்திய மற்றும் உலகலவில் விமான போக்குவரத்து சந்தையை கைபற்ற சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்தது குறிப்பிடதக்கது.
ஏர்ஏசியா
உலக சந்தைகளை கைபற்ற சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்துடனும், உள்நட்டு சந்தையை கைபற்ற மலேசியாவின் ஏர்ஏசியா நிறுவனத்துடன் இணைந்தது.
தலைமையகம்
மேலும் விஸ்தாரா நிறுவன பிற நிறுவனங்களை போல மும்பை, பெங்களுரூ போன்ற நகரங்களை தேர்ந்தெடுக்காமல், டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட உள்ளது.
ஏர்பஸ் 320
முதற்கட்டமாக இந்நிறுவனம் ஒரேஒரு ஏர்பஸ் 320 விமானத்தை கொண்டு செயல்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் இதை 5ஆக உயர்ந்த திட்டமிட்டுள்ளது விஸ்தாரா.
விஸ்தாரா-வுக்கு போட்டி
இந்த புதிய நிறுவனத்திற்கு இத்துறையின் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா மிகப்பெரிய போட்டியாக இருக்கும். மேலும் ஜெட் ஏர்வேஸ் அதேநாளில் ஏதிஹாட் நிறுவனத்துடன் இணைந்துள்ளதால் விஸ்தாரா-வுக்கு போட்டு கடுமையாக இருக்கும்.
பங்கீடு
இந்த நிறுவனத்தின் டாடா சன்ஸ் நிறுவனம 51 சதவீதமும், மீதமுள்ளவை சிங்கப்பூர் நிறுவனம் வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் சேவை வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து துவங்குகிறது.


Click it and Unblock the Notifications