ஜெய்ப்பூர்: சில நாட்களுக்கும் முன் ஐஐடி கராக்பூர் மாணவருக்கு 1.55 கோடி சம்பளத்துடன் அமெரிக்காவில் வேலை வழங்கிய பேஸ்புக், கடந்த திங்கட்கிழமை ஐஐடி பாம்பே மாணவிக்கு 2 கோடி ரூபாய் சம்பளத்தை அளித்துள்ளது. இதுவே ஐஐடி கல்லூரிகளில் கொடுக்கப்பட்டுள்ள அதிகப்படியான சம்பளம்.
ஆஷ்தா அகர்வால்
ஐஐடி பாம்பே கல்லூரியில் நான்காவது வருடம் கம்பியூட்டர் சயின்ஸ் படித்து வரும் ஆஷ்தா அகர்வால்-க்கு வெறும் 20 வயது தான் ஆகிறது. இவர் தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 3வது வருட இன்டர்ன்ஷிப்பை கடந்த மே-ஜூன் மாதத்தில் முடித்துள்ளார்.
ப்ரீ பிளேஸ்மென்ட்
இதனை தொடர்ந்து ஆஷ்தா அகர்வாலின் திறமையை கண்டு பேஸ்புக் நிறுவனம் இவருக்கும் தனது படிப்பை முடிக்கும் முன்னரே நிறுவனத்தில் பணியை உறுதி செய்தது.
குளிர்கால விடுமுறை
அமெரிக்காவில் குளிர்கால விடுமுறைக்கு சொந்த ஊரான ஜெய்ப்பூர் வந்த ஆஷ்தா அகர்வால் அதுகுறித்து கூறுகையில்,"பேஸ்புக் நிறுவனத்தில் வேலை உறுதியானது நினைத்து மிகவும் மிகழ்ச்சி அடைகிறேன் என்றும், கல்லூரியில் 8 செமஸ்டரை முடித்த உடன் கலிப்போர்னியாவில் உள்ல தலைமை அலுவலகத்தில் சேர ஆசையாக உள்ளது" என தெரிவித்தார்.
அக்டோபர் 2015
மேலும் கல்லூரி தேர்வுகளை முடித்து விட்டு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாத துவக்கத்தில் நிறுவன பணிகளில் சேர உள்ளார் ஆஷ்தா அகர்வால்.
பெற்றோர்கள்
ஆஷ்தா அகர்வாலின் தந்தை அசோக் அகர்வால் ராஜஸ்தான் மாநில தொலைதொடர்பு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கிறார், இவரது சகோதரி கெமிக்கல் இன்ஜினியராக உள்ளார்.
முதல் இடம்
இவர் சிறு வயது முதல் இந்தியா மற்றும் உலகளவில் நடக்கும் பல அறிவியல் தேர்வுகளில் முதல் இடத்தை தட்டிச்சென்றுள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications