அமெரிக்காவிற்கு எதிரான இறக்குமதி வரி வழக்கில் இந்தியாவிற்கு சாதமான தீர்ப்பு!! உலக வர்த்தக அமைப்பு

ஜெனீவா: அமெரிக்காவுக்கு எஃகு ஏற்றுமதி செய்யும் விவகாரத்தில், அமெரிக்க அரசு முறையற்ற வகையில் இந்திய ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்களுக்கும் வரி விதிக்கப்படுவதாகவும், இதனை உடனடியாக சீர்படுத்தவும் உலக வர்த்தக அமைப்பு தீர்ப்பளித்துள்ளது.

மேலும் உலக வர்த்தக அமைப்பு கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவிற்கு சாதகமாக செயல்பட்டு வந்த நிலையில், நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பு முற்றிலும் அமெரிக்காவிற்கு எதிரானது.

இறக்குமதி வரி வழக்கு

இறக்குமதி வரி வழக்கு

அமெரிக்காவில் இந்தியன் ஸ்டீல் பைப் உருவாக்குவதற்காக, இந்திய பொதுத்துறை நிறுவனமான NMDC ஏற்றுமதி செய்த இரும்பு தாது மற்றும் எஃகு பொருட்களுக்கு அமெரிக்கா அரசு அதிகமாக இறக்குமதி வரியை விதித்திருந்தது. அதுபோல் டாடா ஸ்டீல் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களின் மீதும் அமெரிக்கா கடுமையான வரிகளை விதித்துள்ளது.

கூடுதல் இறக்குமதி வரி

கூடுதல் இறக்குமதி வரி

மேலும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில வகை எஃகு பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதல் இறக்குமதி வரி விதித்து வந்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, உலக வர்த்தக அமைப்பின் கீழ், இரு நாடுகளுக்கிடையேயான வரிச் சலுகை, கூடுதல் வரி தொடர்பான விதிமுறைகளுக்கு எதிரானது என்று இந்தியா கூறியது.

சாதகமான தீர்ப்பு

சாதகமான தீர்ப்பு

இத்தீர்ப்பு குறித்து அமெரிக்க இரும்பு மற்றும் ஸ்டீல் இன்ஸ்டியுட் நிறுவனத்தின் தலைவர் தாமஸ் ஜே.கிப்சன் கூறுகையில், "உலக வர்த்தக அமைப்பு அறிவித்த தீர்ப்பு அமெரிக்க வர்த்தக சட்டங்களில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் உள்ளது. இதனை சரி செய்யும் முயற்சியில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த வர்த்தக விதிகளை மாற்றி அமைக்க வேண்டும்." என தெரிவித்தார்.

80 சாட்சியங்கள்

80 சாட்சியங்கள்

இவ்வழக்கிற்கு எதிராக இந்தியா பல ஆதாரங்களையும், சாட்டியங்களையும் அளித்தது. அதில் 80 ஆதாரங்களை அர்த்தமற்றது என அமெரிக்க அரசு அறிவித்தது, ஆனால் பிற சாட்சியங்கள் இந்தியாவிற்கு சாதகாமக அமைந்தது குறிப்பிடதக்கது.

300% இறக்குமதி வரி

300% இறக்குமதி வரி

அமெரிக்கா இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில வகை எஃகுகளுக்கு 300 சதவீதம் வரை இறக்குமதி வரி விதித்து வந்தது. இந்த வரிவிதிப்பிற்கு எதிராக, 2012ஆம் ஆண்டு, உலக வர்த்தக அமைப்பின் கீழ் ஜெனீவாவில் செயல்படும் நடுவர் மன்றத்தில் இந்தியா புகார் மனு அளித்தது.

மேல்முறையீட்டு செய்த அமெரிக்கா

மேல்முறையீட்டு செய்த அமெரிக்கா

கடந்த ஜூலை மாதம், இந்தியாவுக்கு சாதகமாக நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அமெரிக்கா வழக்கம் போல் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு செய்தது.

இந்தியாவிற்கு கிடைத்த நியமான வெற்றி

இந்தியாவிற்கு கிடைத்த நியமான வெற்றி

இந்த மேல்முறையீட்டில் தற்போது, இந்தியாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கை, விதிமுறைகளுக்கு முரணானது என்று மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.

உலக வர்த்தக அமைப்பு

உலக வர்த்தக அமைப்பு

உலக வர்த்தக அமைப்பின் கீழ் ஏற்பட்ட உடன்படிக்கைகளுக்கு கட்டுப்பட்டு, அமெரிக்கா தனது வரி விதிப்பு முறைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+