கேரள நிதியமைச்சர் மீது லஞ்சப் புகார்!! மாநில அளவிலான சோதனைகளுக்கு உத்தரவு...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கேரள மாநிலத்தின் நிதி அமைச்சர் கே.எம். மணி அவர்கள் பார் உரிமையாளர்களிடம் இருந்து 50 இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் சிறப்பு குழு வழக்கு பதிவு செய்துள்ளது.

 

இதற்காக பல சாட்சியங்களை லஞ்சு ஒழிப்பு அமைப்பு சேகரித்துள்ளது, சில தகவல்கள் அமைச்சர் மணி அவர்களின் பணியிடங்கள் மற்றும் வீடுகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. பார் உரிமையாளர்கள் 1 கோடி ரூபாய் லஞ்சப் பணத்தை மூன்று தவணைகளாக செலுத்தியுள்ளனர். இதில் 50 இலட்சம் ரூபாய் கடைசி தவணையாகும்.

கேரள நிதியமைச்சர் மீது லஞ்சப் புகார்!! மாநில அளவிலான சோதனைகளுக்கு உத்தரவு...

மேலும் இந்த சோதனையை கேரள அரசிற்கு எதிர் கட்சியின் தலைவர் அச்சுதானந்தன் அளித்த கடிதத்தின் பேரில் நடத்தப்பட்டது என லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் மூலம் மாநில அளவிலான சோதனைகளை நடத்த லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளது.

அதுகுறித்து நிதி அமைச்சர் மணி அவர்கள் டெல்லியில் மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த வழக்கில் உறுதியான சாட்சியங்கள் எதுவும் இல்லை என்றும், இது போல் பொய்யான வழக்குகள் பல அமைச்சர்கள் மீது தொட்டக்கப்பட்டு பின்பு அத்துறையே விளக்கிக் கொண்டது. இதும் அப்படியே அமையும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இது எதிர்கட்சிகளின் சூழ்ச்சியா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. இவ்வழக்கின் திருப்பங்களை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kerala Finance Minister Mani booked over bribery allegations

A special cell of the Vigilance and Anti-Corruption Bureau (VACB) has registered a case against Kerala Finance Minister K.M. Mani for having allegedly accepted a bribe of Rs. 50 lakhs from bar owners.
Story first published: Thursday, December 11, 2014, 15:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X