சோலார் மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் புதிய திட்டம்!! 5,000 கோடி நிதி உதவி...

டெல்லி: இந்தியாவில் சோலார் மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் புதிய திட்டங்களுக்க மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் படி இந்தியாவில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் 1000 மொக வாட் ஆற்றல் கொண்ட இணைப்பு மின்உற்பத்தி நிலையங்களை அமைக்க உள்ளது.

ரூ.5,000 கோடி நிதி உதவி

ரூ.5,000 கோடி நிதி உதவி

பொத்துறை நிறுவனங்கள் அமைக்கும் இத்திட்டத்திற்காக மத்திய அரசு பொதுத்துறை நிறுவங்களுக்கு 1,000 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க உள்ளது குறிப்பிடதக்கது. அதுமட்டும் அல்லாமல் 500 மெகாவாட் ஆற்றல் கொண்ட 25 சோலார் தளங்களை உருவாக்குவும் 4,050 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறை

பாதுகாப்பு துறை

மேலும் 300 மெகா வாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட தளங்களை மத்திய பாதுகாப்பு துறை நிறுவ உள்ளது.

3ஆண்டு திட்டம்

3ஆண்டு திட்டம்

பொதுத்துறை நிறுவனங்கள் அமைக்கப்படும் 1000 மெகா வாட் மின் உற்பத்தி தளங்கள் அடுத் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும், இத்திட்டத்திற்கு தேவைப்படும் அனைத்து விதிமான பொருட்களும் இந்தியாவில், இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

300 மெகா வாட் மின்சாரம்

300 மெகா வாட் மின்சாரம்

இந்திய பாதுகாப்பு துறையின் மூலம் அமைக்கப்படும் 300 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி தளம் 2014-19ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்படும், இத்திட்டத்திற்காக மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் 750 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கிறது.

25 சோலார் பார்க்

25 சோலார் பார்க்

மேலும் இந்தியாவில் 20,000 மெகா வாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 25 சோலார் பார்குகளை அமைப்பதற்கும் மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் அமைச்சகம் இத்துறை அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது. இத்திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் முடிவுறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+