2015ஆம் ஆண்டில் பணியாளர்களின் சம்பளம் 11% உயரும்!!

டெல்லி: இந்திய நிறுவனங்களில் பணியாளர்களின் சம்பளம் 2015ஆம் ஆண்டில் சுமார் 11 சதவீதம் வரை அதிகரிக்கும் என மெர்சர் நிறுவனம் தனது 2014ஆம் ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது. மெர்சர் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு இந்தியா ஆல் இண்டஸ்டீரிஸ் டோட்டல் ரெமுனரேஷன் சர்வே என்ற தலைப்பில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது, இதில் பணியாளர்களின் சம்பளம் உயர்வு பற்றிய முக்கிய கருத்துகளை குறிப்பிட்டு இருந்தது இந்நிறுவனம்.

2015ஆம் ஆண்டில் பணியாளர்களின் சம்பளம் 11% உயரும்!!

கடந்த வருடம் நடத்திய ஆய்வில் 2014ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வை 10.4 சதவீதமாக இருந்தது, ஆனால் இவ்வருடம் இதன் அளவு 11 சதவீதமாக இருக்கும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதில் மருத்து துறை மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அதிகப்படியாக 12 சதவீதமாகவும், குறைந்த பட்சமாக 10 சதவீதமாகவும் இருக்கும் என தெரிகிறது.

அதேபோல் நுகர்வோர் பொருட்கள் துறை 11 சதவீதமும், கெமிக்கல் துறையில் 10.8 சதவீதமாகவும், ஆட்டோமொபைல் துறையில் 10.1 சதவீதமாகவும் இருக்கும் என இந்நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

மேலும் நாட்டில் சிறந்த வர்த்தகத்திற்கான சாத்தியகூறுகள் மிகவும் சிறப்பாக இருப்பதால் அனைத்து துறைகளிலும் சம்பளங்களின் உயர்வு சிறப்பாக இருக்கும் என மெர்சர் நிறுவனத்தின் தகவல் தீர்வு பரிவின் தலைவர் சாந்தி நரேஷ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+