மும்பை பங்கு சந்தையில் 229 புள்ளிகள் சரிவு!! முக்கிய துறை பங்குகள் மந்தமான வர்த்தகம்...
மும்பை: மும்பை பங்கு சந்தையில் நேற்று எனர்ஜி, வங்கி மற்றும் முதலீட்டுத்துறை பங்குகள் கடுமையான வீழ்ச்சி கண்டதால் சந்தையில் ஒரே நாளில் சுமார் 229 புள்ளிகள் வரை சரிந்தது.
மேலும் 30 பங்கு குறியீட்டின் நிலை மிகவும் மோசமாக இருந்தது இதற்கு முக்கிய காரணம் சீனச் சந்தையில் நிலவிய மந்த நிலை மற்றும் கிரீஸ் நாட்டில் உருவாகிய அரசியல் பிரச்சனைகளும் இந்திய சந்தையில் சரிவு உருவாக்கியது.

இன்று காலை வர்த்தகத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், பங்கு சந்தை நேற்றைய வர்த்தகத்தின் முடிவை விட அதிகமான புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை பங்கு சந்தையில் 38.81 புள்ளிகள் உயர்வுடன், 27,646.44 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதே போல் நிஃப்டியும் 14.65 புள்ளிகள் உயர்வுடன் 8,307.85 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications