மும்பை: கடந்த இரண்டு மாதங்களில் இந்திய சந்தையில் அன்னிய முதலிட்டின் அளவு மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை முடிவடைந்த வாரத்தில் வெறும் 1.65 பில்லியன் டாலர் மட்டும் முதலீடாக பெற்று மொத்த முதலீட்டின் அளவு 314.66 பில்லியன் டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அன்னிய சொத்துக்களின் மதிப்பும் 867 மில்லியன் டாலர் குறை 289.65 பில்லியன் டாலராக உள்ளது. அன்னிய சொத்துக்கள் குறைந்ததற்கு முக்கிய காரணம், ரூபாய் மதிப்பின் சரிவை காக்க ரிசர்வ் வங்கி டாலர்களை சந்தையில் விற்றுள்ளது.
மேலும் ரூபாய் மத்திப்பு கடந்த வாரத்தில் மட்டும் 0.81 சதவீதம் சரிந்து 62.30ஆக உள்ளது இது 10 மாத விலை குறைவாகும். மேலும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் ஸ்திரதன்மையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி டாலரை 62.35 ரூபாய்க்கு வர்த்தகம் செய்து வருகிறது.
2014ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரையில் இந்திய கடன் சந்தையில் மட்டும் 24.7 பில்லியன் டாலர் முதலீடு குவிந்துள்ளது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications