நிதிநெருக்கடி.. மீண்டும் (ம்) வருவோம்.. சொல்கிறது ஸ்பைஸ்ஜெட்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகளை சந்தித்து வருகின்றனர். இந்த வாரத்தில் மட்டும் இத்தகைய சந்திப்பு இரண்டாவது முறையாகும்.

ட்விட்டரில் கருத்து

ட்விட்டரில் கருத்து

இச்சந்திப்பு குறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சஞ்சீவ் கபூர் செய்தியாளர்களிடம் பதில் அளிக்கவில்லை. ஆனால் தனது ட்விட்டர் பக்கத்தில்,"நிறுவனத்தின் தற்காலிக சேவை முடக்கத்துக்கு வாடிக்கையாளர் மன்னிக்க வேண்டும். விரைவில் உங்களின் நன்நம்பிக்கையை பெறுவோம்" என்று தெரிவித்து உள்ளார்.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெயின் விலை சரிவு, நிறுவன செய்லபாட்டுக்கு கண்டிப்பாக உதவும் என்று இந்நிறுவனத்தின் பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குட் நியூஸ்

குட் நியூஸ்

அதேபோல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செயல்பாடு பற்றி அடுத்த இரண்டு நாட்களில் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்தார். கண்டிப்பாக வாடிக்கையாளர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இச்செய்தி சாதகமாகவே அமையும்.

கடையை சாத்தும் ஜடியா இல்லை

கடையை சாத்தும் ஜடியா இல்லை

இந்திய டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷன் (TAAI) அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு பதில் அளித்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்,"நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது உன்மை தான் ஆனால் முழுமையாக மூடும் நிலையில் இல்லை" என்று தெளிவுப்படுத்தியுள்ளது.

பங்கு மதிப்பு

பங்கு மதிப்பு

கடந்த டிசம்பர் 1 தேதியில் இருந்து இந்நிறுவனத்தின் பங்கு விலை 21.25 ரூபாயில் இருந்து 14.55 ரூபாய் வரை குறைந்துள்ளது குறிப்பிடதக்கது. திங்கட்கிழமை சந்தை துவக்கத்தில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு கணிசமாக அளவில் உயரும் என தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SpiceJet officials meet DGCA

SpiceJet has indicated that its promoters are backing the airline that is apparently facing financial problems. On Friday, the airline’s officials met the Secretary, Civil Aviation, and the Director-General of Civil Aviation to pass this message. This is the second time this week that SpiceJet officials are meeting the DGCA.
Story first published: Saturday, December 13, 2014, 12:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X