1.79லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி!! கோல் இந்தியா
டெல்லி: இந்தியாவில் 2009ஆம் ஆண்டிற்கு பிறகு உருவாக்கப்பட்ட இரண்டு மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான 1.79 இலட்சம் டன் நிலக்கரியை மத்திய அரசின் நிறுவனமான கோல் இந்தியா நிறுவனம் முன்திரா துறைமுகத்தில் இறக்குமதி செய்துள்ளது.

தற்போது நாபா டிபிஎஸ், தால்வாண்டி சபோ டிபிஎஸ் அனல் மின் நிலையத்திற்கு ரயில் மூலம் கொண்டு போய் சேர்க்கும் வேலை நடைப்பெற்று வருவதாக கோல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு ஜனாதிபதி உத்தரவுகளின் பேரில், எரிபொருள் ஒப்பந்தத்தின் மூலம் இவ்விரு மின் நிலையத்திற்கும் தேவைப்படும் நிலக்கரியை 80 சதவீதத்தை உள்நாட்டில் இருந்தும், 15 சதவீதம் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்து கொள்ள உத்திரவிட்டுள்ளது.
இதன்படி ஏல முறையில் MMTC நிறுவனத்தின் உதவியுடன் நிலக்கரியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications