7 வருடத்திற்கு பிறகு ஃபிரஷ்ஷர்களின் சம்பளத்தை உயர்த்தும் டிசிஎஸ்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: பணியாளர்கள் வெளியேற்றம், கேம்பஸ் இண்டர்வியூ மூலம் 35,000 பேர் நிறுவனத்தில் இணைப்பு என பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வந்த டிசிஎஸ் நிறுவனம், மேலும் ஒரு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளது.

டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் நிறுவனத்தில் இணையும் புதிய பணியாளர்களுக்கு (ஃபிரஷ்ஷர்கள்) காலம் காலமாக அளித்து வந்த சம்பளத்தை உயர்த்துவதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

(ஐடி.. புதிதாய் சேர்ந்தவர்களின் சம்பளம் கடந்த 6 வருடமாக உயரவில்லை!!)(ஐடி.. புதிதாய் சேர்ந்தவர்களின் சம்பளம் கடந்த 6 வருடமாக உயரவில்லை!!)

ஃபிரஷ்ஷர்களின் சம்பளம்

ஃபிரஷ்ஷர்களின் சம்பளம்

தகவல் தொழில்நுட்ப துறையில் பன்னாட்டு நிறுவனங்களில் இணையும் புதிய பணியாளர்களின் சம்பளம் கடந்த 8 வருடங்களாக உயர்த்தாமல் 2.8 இலட்சம் முதல் 3.2 இலட்சமாகவே இருந்து வருகிறது. இது பற்றி ஊடகங்களில் பல கட்டுரைகள் வந்துள்ளது குறிப்பிடதக்கது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

டிசிஎஸ் நிறுவனத்தை தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் பிற நிறுவனங்களும் ஃபிரஷ்ஷர்களின் சம்பளத்தை உயர்த்தும் என தெரிகிறது.

2,00,000 பேர் போட்டி

2,00,000 பேர் போட்டி

இந்நிறுவனம் ஆண்டுக்கு 35,000 பணியாளர்கள் தேர்தெடுக்கிறது, ஆனால் இப்பணியிடங்களுக்கு 2,00,000 பேர் போட்டி போடுகின்றனர் என இந்நிறுவனத்தின் மனிதவள பிரிவின் உயர் அதிகாரியான முகர்ஜி தெரிவித்தார்.

13 பில்லியன் டாலர்

13 பில்லியன் டாலர்

சந்தையில் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 13 பில்லியன் டாலராகும். மேலும் இந்தியாவில் இருந்து அதிகளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் டிசிஎஸ் முதன்மையானவை, இந்நிறுவனத்தை தொடர்ந்து இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்கள் உள்ளது.

(இன்றைய இன்ஜினியரிங் பட்டதாரிகளின் உண்மை நிலை!!)(இன்றைய இன்ஜினியரிங் பட்டதாரிகளின் உண்மை நிலை!!)

மொத்த பணியாளர்கள்

மொத்த பணியாளர்கள்

இந்நிறுவனத்தில் மொத்தம் 3,13,757 பணியாளர்கள் தொழில்நுட்பத்தில் பணியாற்றுகின்றனர், இதில் 100,000 பேர் பெண்கள். மேலும் 60 சதவீதம் பணியாளர்கள் ஃபிரஷ்ஷர்கள் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS Plans to Hike Entry-Level Salary Offers

Indian IT bellwether Tata Consultancy Services (TCS) is planning to increase its pay offer to freshers recruited directly or through campus interviews, a senior official said on Friday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X